புஷ்கர் நிறுவனத்தின் உலகத் தர வீடுகள்

புஷ்கர் நிறுவனத்தின் உலகத் தர வீடுகள்
--------------------------------------------------------------------
" மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள், அதிகபட்ச பிரைவசி, விஸ்தாரமான வீடு, உலகத்தர கட்டுமானம், ஹை புரொஃபைல் ஆட்டோமேக்ஷன், லக்சரி இன்டீரியர் போன்றவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், பங்களா போன்ற ப்ளாட் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் புஷ்கரின் புராஜெக்டுகள் மிகவும் ஏற்றவை."

-------------------------------------------------------------------
சென்னை அண்ணா நகர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனம் புஷ்கர் ப்ராபர்டிஸ். அண்ணாநகர், கொளத்தூர், கொரட்டூர் போன்ற மேற்கு சென்னை பகுதிகளிலும், அடையாறு, குரோம்பேட்டை போன்ற தென் சென்னைப் பகுதிகளிலும் மட்டுமின்றி, தி.நகர் போன்ற மத்திய சென்னையிலும் ஏராளமான லக்சரி புராஜெக்டுகளை செய்து வரும் நிறுவனம் இது.

வீடு விற்பனை என்பதே சவாலாகிப்போன இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட 10 லட்சத்திற்கும் 20 லட்சத்திற்கும் வீடுகளை விற்க தயாராக இருக்க, “எனது புராஜெக்டின் ஆரம்ப விலையே95 லட்சம் தான்” என சிரித்தபடியே சொல்கிறார் புஷ்கர் ப்ராபர்டிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.கீர்த்திவாஸ்.

“2000க்கு பிறகுதான் இந்த நிறுவனத்தைத் துவங்கினேன். நான் படித்ததெல்லாம் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ மேனேஜ்மென்ட்தான். ஆனால், நான் அனுபவ சிவில் பாடத்தை ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
அதுதான் சென்னை சைதன்யா ஹோம்ஸ். அங்கு எனது தந்தையின் நண்பர் சைதன்யா ஹோம்ஸின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் ரெட்டி அங்கிளிடம்தான் சிவில் பொறியியல், கட்டுமான மேலாண்மை போன்ற அனைத்து விக்ஷயங்களையும் கற்றேன். ஒரு கட்டுமான புராஜெக்டின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரமேஷ் அங்கிளின் ஆசியோடு சைதன்யா ஹோம்ஸிலிருந்து விலகி புஷ்கர் நிறுவனத்தைத் துவங்கினேன். முதல் இரண்டு புராஜெக்டுகள் லேசாக தடுமாற்றம் இருந்தாலும் அடுத்தடுத்த புராஜெக்டுகளில் வெற்றி பெற ஆரம்பித்தேன்.”

2000 காலகட்டம் என்பது ரெஸிடென் ஷியல் புராஜெக்டுகளின் பொற்காலம் எனச் சொல்லலாம். அப்போது இருந்த பல்வேறு பில்டர்கள் நடுவே உங்களது புராஜெக்டுகளை எப்படிப்பட்ட தனித்தன்மையுடன் உருவாக்கத் திட்டமிட்டீர்கள்?

“நானும் எல்லோரையும் போல நிலம் வாங்கி நடுத்தர மக்களுக்கான வீடுகளை கட்ட நினைத்தேன். ஆனால், அவர்களுக்கான குறைந்த செலவில் அதிகபட்ச வசதிகளுடனான பட்ஜெட் வீடுகளை சென்னையின் முக்கியமான பகுதிகளில் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தன. மிகக் குறைந்த விலையுடைய வீடுகளில் தரமான கட்டிடப் பொருட்களையும் உதிரிபாகங்களையும் பயன்படுத்த பட்ஜெட் ஒரு தடையாக இருந்தது. அதேசமயம் உலகத் தரத்திலான ஒரு குடியிருப்புக் கட்டுமானத்தை உருவாக்க நான் சைபடுகிறேன் என்றால், அதை நடுத்தர மக்களால் வாங்க முடியவில்லை. எனவேதான் நான் தீர்மானித்தேன். 30, 40 லட்சங்களில் சுமாரான வீடுகளை உருவாக்குவதை விட 90 லட்சம், 1 கோடியில் சகல வசதிகளுடன் கூடிய லக்சரி புராஜெக்டை அதுபோன்ற வீடுகளை விரும்பக் கூடிய உயர்குடி மக்களுக்கு உருவாக்க நினைத்தேன்.

நான் வழக்கமான பில்டர்களிடமிருந்து வேறுபட நினைத்தது இந்த விக்ஷயத்திற்காகத்தான். அதாவது, 2 கிரவுண்ட் நிலம் வாங்கி தீப்பெட்டி போல 16 வீடுகள் கட்டுவது என் ஸ்டைல் அல்ல. 2 கிரவுண்ட் நிலத்தில் நான்கே நான்கு லக்சரி வீடுகளை கட்டுவதுதான் என் ஸ்டைல். நான் மட்டுமல்ல, என்னைப் போன்றே உயர்தர குடியிருப்புகளை இன்னும் சில பில்டர்கள் கட்டி வருகிறார்கள்.”

புஷ்கரின் புராஜெக்ட் என்றாலே அல்ட்ரா டீலக்ஸ் புராஜெக்ட் தான் என உங்கள் தர அளவீட்டை மக்கள் நினைப்பதற்கு அடிப்படைக் காரணமாக என்ன நினைக்கிறீர்கள்?

“என் புராஜெக்டின் தரம் என்பது மண் பரிசோதனையிலிருந்து துவங்குகிறது. தலைசிறந்த மண் பரிசோதனை நிபுணர் டாக்டர். பிரசாத் அவர்கள் தான் எனக்கு சாயில் டெஸ்டிங் எக்ஸ்பெர்ட். இந்தியாவின் நெம்பர் ஒன் ஸ்ட்ரக்சுரல் ஆர்கிடெக்ட் அலெக்ஸ் ஜேக்கப் அவர்கள் தான் எனது எல்லா புராஜெக்டுகளும் டிசைன் செய்கிறார். ஒவ்வொரு கட்டிடப் பொருட்களும் அனைத்து தர பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டே எனது புராஜெக்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. டைல், மார்பிள்களில் துவங்கி எலெக்ட்ரிக்கல், பைப், கேபிள், கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றும் டாப் கிளாஸ், டாப் பிராண்டாக தான் புஷ்கர் புராஜெக்டில் பயன்படுத்தப்படும் என்பது எனது வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல பிறரும் நன்கு அறிந்த ஒன்று.

எனது புரௌசர் மற்றும் அக்ரிமென்டில் என்ன பிராண்ட் பொருளை கம்மிட் செய்கிறேனோ அதிலிருந்து ஒருபோதும் நான் தவஷூயது கிடையாது.

எனது எல்லா புராஜெக்டுகளும் ஏசி வசதியுடன் கூடிய ஹோம் ஆட்டோமேக்ஷன் புராஜெக்டுகளாக தற்போது உருவாகி வருகிறது. வீட்டின் அனைத்து கட்டுபாடுகளும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அவை இருக்கும். அதனால்தான் ப்ளாட்டின் சாவி கொடுக்கும் போதே, ஐ பேட் ஒன்றைக் கொடுத்து விடுகிறோம். அதில் வீட்டின் அனைத்து கன்ட்ரோலும் அடங்கி விடும். சாதாரண தரத்தில் இரண்டு ப்ளாட்டுக்களை வாங்கக்கூடிய அளவிற்கு உங்களிடம் பணம் இருந்தால், ப்ளாட் வடிவில் ஒரு மினி பங்களாவையே புஷ்கர் நிறுவனம் நகரின் இதயப் பகுதியில் தருகிறது. எனது புராஜெக்ட் ஒவ்வொன்றும் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையானது. அதனால்தான் புஷ்கரின் புராஜெக்டுகள் அறிவிப்பு அளவிலேயோ அல்லது சைட்டில் விளம்பரப் பலகை வைக்கும் நிலையிலேயோ அனைத்து வீடுகளும் விற்றுவிடுகின்றன. எனவேதான், நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்களால் நிலைத்து நிற்க முடிகிறது.

நாங்கள் இதுவரை 80 புராஜெக்டுகளை முடித்திருக்கிறோம். 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளரின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய அனைவருடைய பெயர்களையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர் விவரங்களும் எனக்குத் தெரியும். பில்டர், வாடிக்கையாளர் என்கிற உறவினைத் தாண்டி என்னை ஒரு குடும்ப நண்பராகவே என்னை அங்கீகரித்திருக்கிறார்கள். எனது புதிய புராஜெக்டின் விவரம் தெரிந்து அதனை தங்கள் நண்பர்கள், உறவுகளுக்குத் தெரிய படுத்தி புராஜெக்ட் எளிதாக விற்க உதவி செய்கிறார்கள்.

டவுன்ஷிப் அல்லது பன்னடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டுகிற பில்டராக நான் இருந்தால் 
இது போன்ற தனிப்பட்ட வியாபார நிறைவு கிடைப்பது சந்தேகம்தான். ஏனெனில், நான் க்வான்டிடியை விரும்புவது கிடையாது. க்வாலிட்டிதான் எப்போதுமே நம்மைக் காப்பாற்றும் என்பதில் உறுதியானவன் நான்.”

புஷ்கர் நிறுவனத்தின் வெற்றிக்கு சொந்தமாக வேறு யார்யாரை எல்லாம் குறிப்பிடுவீர்கள்?
“முதலில் எனது குரு, ஆசான், வழிகாட்டி சைதன்யா ஹோம்ஸ் நிறுவனர் திரு.ரமேஷ் ரெட்டி அங்கிளைச் சொல்வேன். அவர்தான் எனக்கு நிர்வாகத்தையும், மனித வள மேலாண்மையும், எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளருடனான நல்லுணர்வையும் எனக்கு போதித்தார். அதற்குப் பிறகு எனது நிறுவனத்தின் அதிகாரிகளையும் ஊழியர்களையும்தான் குறிப்பிடுவேன். எனது குடும்பத்தினருடன் அளவளாவும் போது உண்டாகும் அதே பரிவு, பாசம் எனது தொழிலாளர்களுடன் பணிபுரியும்போது எனக்கு உண்டாகிறது. நான் இவ்வளவு நேரம் உங்களிடம் இடையூறு இன்றி பேச முடிகிறது என்றால், அவர்கள் பணிகளை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

புஷ்கர் நிறுவனத்தின்தொடர்ச்சியான வெற்றி என்பது எத்தனை முக்கியமோ, அதே அளவு அக்கறை நான் ஒவ்வொரு ஊழியர்கள் மீதும் வைத்திருக்கிறேன். அவர்களது கல்வி நிலை, வாழ்வியல் நிலை, பொருளாதார நிலை, போன்றவை உயர வேண்டும் என்பதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதேபோன்று அவர்களும் அவர்களுடைய உச்சக்கட்ட ஒத்துழைப்பை நிறுவனத்தின் வெற்றிக்கு தொடர்ச்சியாகதந்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதை விலைகொடுத்து வாங்க முடியாத விக்ஷயமாகும். அது எனக்கு கிடைத்திருப்பது என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

வருடத்திற்கு 5 புராஜெக்ட், என்னுடைய 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களுடன் ஆண்டிற்கு ஒருமுறை வெளியூர் பயணம் இதுதான் எனது வாழ்வியல் வட்டம். இது, குறுகியதாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், எனக்கு நிறைவாக இருக்கிறது. அதுதான் முக்கியம்.” என்றார் கீர்த்திவாஸ்.

ஒரு வெற்றிகரமான கட்டுநரிடம் உரையாடிய மகிழ்வு மட்டுமன்றி மனித வள மேலாண்மையில் கரைகண்ட மனிதநேயமிக்கவருடன் உரையாடிய மகிழ்வும் நமக்கு உண்டானது.

சென்னையின் மிகமுக்கிய பகுதிகளில் உருவாகி வரும் புஷ்கர் நிறுனத்தின் லக்சரி புராஜெக்டுகள் பற்றி அறிய :

M/s. PUSHKAR PROPERTIES P. LTD
1A, F Block, 51/3, 2nd Main Road, Anna Nagar East, Chennai - 102
Mb : 98843 97640 Ph : 044 43410800
www.pushkarproperties.in
----------------------------------------------------------------------------------------
From Builders line Monthly
Visit us : www.buildersline.in







உங்கள் ஊருக்கு நேரில் வருகிறது..
பில்டர்ஸ் லைன் & பிராம்ப்ட் பதிப்பகம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூலை மாத்தில் , நெய்வேலி, ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் , ஆகஸ்ட் மாதத்தில்  மதுரையிலும் பில்டர்ஸ்லைன் மற்றும் பிராம்ப்ட் பதிப்பகம் கலந்து கொள்கிறது.



வீடு, ரியல் எஸ்டேட் , இன்டிரியர், வீட்டு பராமரிப்பு, கட்டிடப் பொறியியல் குறித்த நூல்கள்

கட்டிட முகப்பு (எலிவேஷன்) , வரைபடங்கள் ( பிளான்) , இண்டிரியர் மாடல்கள் அடங்கிய சிடிக்கள்  

தமிழ்நாடு கட்டிடத்துறை முகவரி அடங்கிய சிடிக்கள்

பில்டர்ஸ் லைன் தமிழ் மற்றும் ஆங்கிலம் மாத இதழ்களுக்கான சந்தா அனைத்தும் ஒரே இடத்தில்.....



கண்காட்சி       : நெய்வேலி புத்தக கண்காட்சி
இடம்                :  நெய்வேலி வளாகம்
தேதி                 :  ஜூலை  3 முதல் 12 வரை 
தொடர்பு நபர்  :  திரு. தாசபிரகாஷ்
தொடர்பு எண் :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  நெல்லை புத்தக கண்காட்சி
இடம்                 : நெல்லை
தேதி                  : ஜூலை  19 முதல் 30  வரை 
தொடர்பு நபர்   திரு. சண்முகம்
தொடர்பு எண்  :  88254 79234


-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        : ஈரோடு புத்தக கண்காட்சி
இடம்                 : ஈரோடு 
தேதி                  : ஜூலை  31 முதல் ஆகஸ்ட்  1  வரை தொடர்பு நபர்   திரு. சண்முகம்தொடர்பு எண்  :  88254 79234



-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  மதுரை புத்தக கண்காட்சி
இடம்                 : மதுரை
தேதி                  : ஆகஸ்ட்  30 முதல் செப்டம்பர் 10  வரை 
தொடர்பு நபர்   திரு. தாசபிரகாஷ்

தொடர்பு எண்  :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------




பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்த மூன்று கண்காட்சிகளில் பில்டர்ஸ்லைன் மற்றும் பிராம்ப்ட் பதிப்பகம் கலந்து கொள்கின்றன..

  • கட்டிடப் பொறியியல், ரியல் எஸ்டேட், கட்டிடப் பராமரிப்பு, சட்டம் , இண்டிரியர்,கட்டிட பிளான்கள், வரைபடங்கள் குறித்த பல நூல்கள் இப்போது ஒரே இடத்தில்



கண்காட்சி       :  பெரம்பலூர் புத்தக கண்காட்சி
இடம்                :  பெரம்பலூர், நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், 
தேதி                 :  பிப்ரவரி 1 முதல் 8 வரை 
ஸ்டால் எண்   :  26 & 27
தொடர்பு நபர்  : திரு. கமலக்கனண்னன்
தொடர்பு எண் : 90435 72599 , 88254 79234
-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        : பில்ட் மேட் -2015
இடம்                 : கோவை கொடிசியா ஹால், கோவை
தேதி                  : பிப்ரவரி 5 முதல் 8 வரை 
ஸ்டால் எண்    :   A - 87 in Hall A
தொடர்பு நபர்   : திரு. சண்முகம்
தொடர்பு எண்  : 78689 14244 , 88254 79234


கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள ' பில்ட் மேட் - 2015' கண்காட்சியில் கீழ்கண்ட கட்டிடத்துறை டேட்டா சிடிகள் விற்பனை செய்யப்படும்.'

1. Tamilnadu Architect Database                              (2,100 Datas)  -------------- Rs.200/-

2.Tamilnadu Civil Engineer Database                      (5,000 Datas)  --------------- Rs.5,000/-

3.Tamilnadu Builders Database                               (14,000 Datas)  -------------- Rs.1,500/-

4. Tamilnadu Real Estate Database                        (8,000 Datas)  ---------------- Rs.750/-

5.Tamilnadu Building Material Suppliers Database (20,000 Datas) ----------------Rs.2,000/-

6. Tamilnadu Interior Database                               (5,000 Datas)  ----------------- Rs.500/-

7.All Over Tamilnadu Construction Industry DB       (61,000 Datas) ---------- ----- Rs. 5,500/-


--------------------------------------------------------------------------------

கண்காட்சி      : பாய் எக்ஸ்போ - 2015
இடம்               : சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை
தேதி                : பிப்ரவரி 13 முதல் 15 வரை 
ஸ்டால் எண்  :  85
தொடர்பு நபர் : திரு. ராஜா
தொடர்பு எண் : 88254 79234 , 98417 43850

--------------------------------------------------------------------------------------------------
கிடைப்பதற்கரிய நூல்களின் அணிவகுப்பைக் காணத்தவறாதீர்



சென்னை புத்தக கண்காட்சியில் பில்டர்ஸ்லைன் & பிராம்ப்ட் பதிப்பகம்

STARTS FROM 13rd  April 2015 

------------------------------------

ஏப்ரல் மாதத்தில் ராயப்பேட்டையில் YMCAதிடலில்


புத்தகச் சங்கமம் கண்காட்சி

பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன் பங்கேற்கின்றன


நமது பிராம்ப்ட் பதிப்பகத்தின் வெளியீடுகளான 
ரியல் எஸ்டேட், கட்டிடத்துறை, வீடு கட்டுதல், கட்டுமானப் பொறியியல், வீட்டுப் பராமரிப்பு, இண்டிரியர், சட்டம், வாஸ்து தொடர்பான அரிய நூல்கள்...

சென்னை , ராயப்பேட்டையில் YMCAதிடலில்  புத்தகச் சங்கமம் 
கண்காட்சியில் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.


மேலும், பில்டர்ஸ்லைன் 5 ஆண்டு சந்தா ரூ.200 குறைவாக கிடைக்கும்.''

பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன் 
---------------------------------------------------------------------------------------
இடம் : புத்தகச் சங்கமம் கண்காட்சி  , ராயப்பேட்டை YMCA திடல் ( அரசு மருத்துவமனை எதிரே),  
தேதி : 13.04.2015 முதல் 23.04.2015
நேரம் : 
வேலை நாட்களில் -  மதியம் 2.30 முதல் இரவு 8.30 வரை
விடுமுறை நாட்களில் - காலை 10.00 முதல் இரவு 8.30 வரை

தொடர்பு நபர் : திரு . பா.சுப்ரமண்யம்
செல் : 88254 79234

எங்கள் புத்தக விலைப்பட்டியலை கீழே காண்க