நிறுவும் வேலைகளுக்கு நிறைய நேரம் ஆகிறதா ?



ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஒவ்வொரு பகுதியையும் தயார் நிலையில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். எல்லாவற்றையும் கோர்த்து இணைக்க வேண்டியதுதான் பாக்கி.ஆனால், பெரும்பாலான வேலைகளில் இது எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பீர்கள். அது இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.  அவ்வாறு இடையூறுகள், இழுத்தடித்தல்கள் இல்லாமல் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமா? சில உத்திகளைப் பின்பற்ற முயற்சியுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் தேவைப்படும் பாகங்கள் கொண்டு வந்து இறக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் இதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களைக் கையாளும் விதமும் முக்கியமானது. முற்றிலும் மனித உழைப்பை நம்பியே இயங்க வேண்டி இருப்பதைக் குறைக்க வேண்டும். அது அதற்கு உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்த முன் வர வேண்டும்.

தனித் தனி பாகங்களைச் சரியான வரிசையில் இணைத்துப் பொருத்தும் வேலையை வரிசைப்படி செய்து முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது, எந்த இடத்திற்கு எத்தனை எண்ணிக்கையில் பாகங்கள் வந்து சேர வேண்டும் என்பதைத் திட்டமிடுவதே இந்த வேலைகளின் தொந்தரவுகளைக் குறைக்கும் முக்கியப் பகுதியாகும். கொண்டு வந்த பொருட்களை எங்கே இருப்பு வைப்பது என்று திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடாமல் எல்லா வற்றையும் கச்சிதமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் சொன்னபடி கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுவார்கள்.

இறக்கி வைப்பதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றாலும் திருட்டு, கொள்ளை, கவனக்குறைவு, முறைகேடான கையாள்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படும். 
 
சாரம் கட்டுதல், உயர்த்து வதற்கான மேடை அமைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் தற்காலிகமானவைதான். வேலை முடிந்ததும் பிரித்து எடுத்துவிடப் போகிறோம், இதற்குப் போய் ஏன் அதிகம் மெனக்கெட வேண்டும் என்கிற மெத்தனம் கூடவே கூடாது.
ஏனென்றால் இம்மாதிரியான ஏற்பாடுகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கும். சேதங்கள் ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கவனமாகச் செய்ய வேண்டியது அவசியம்.பாகங்களை எந்த வரிசைப்படி அடுக்க வேண்டும், எந்த வரிசைப்படி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே பெரிய கலை. இதை உரிய விதத்தில் செய்பவர்கள் வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் முடித்துவிடுவார்கள்.
    வரிசைக்கிரமத்தை மாற்றுகிறவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்வார்கள்.  வேலைகளிலும் தேவையற்ற தாமதம் திணிக்கப்படும். சின்னச் சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது  பெரிய ஆதாயத்தைக் கொடுக்கும்.சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் நிறுவும் வேலைகளுக்கு ஏன் நிறைய நேரம் ஆகப் போகிறது?

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !



காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத்தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பயன்படுத்தப்பட்ட பிறகுதானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை?உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற்நுட்பம்.  காரைக்கான தேவை அதிக அளவு இருக்கும்போது இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக்கலாம்.

தரம் எப்படி?

உலர் காரையைப் பயன்படுத்துவது கட்டுமானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உலர் காரையின் தரம் என்பது கலவை விகிதத்தைப் பொறுத்தது. கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்கப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம். எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவைகாரையை எந்தெந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்? செங்கல் கட்டுமான வேலைகளுக்கு இது அவசியம் தேவைப்படும். இணைப்புகளை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கும் காரை வேண்டி இருக்கும். ஓடுகளை  அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்பதற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவாக்கவும் காரையைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. காரைத் தயாரிப்பு முறைகளும் வேறுபடுகின்றன.

இந்த வேலைகளை எல்லாம் பொதுவாக ஒரே இயந்திரத்தில் செய்ய முடிந்தால்? இந்தச் சிந்தனையின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் டாஷ்வால் இரட்டைஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?

கலவையின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும் தரத்திலான கலவையை எளிதில் உருவாக்கிவிடலாம். கலவையைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.  உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம்படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.
கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும் ஏற்படாதவகையில் கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரத்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.

கலவைகளைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங்களுக்குள் கலவை வேலைகளை முடித்துவிடலாம் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவாரத்திற்கு இடமில்லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும். மின்சாரமும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சொந்த உபயோகத்திற்கு மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன்படுத்த முடியும்.

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான்அட்மிக்ஸ் ! (PENETRON ADMIX)


கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான்அட்மிக்ஸ்(Penetron Admix)எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள்  நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.
பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது? கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு   0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.

நிரூபணம் தேவையா?

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில்  ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேறியது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில்
மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.

இந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.

கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ்

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டுமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.

அந்தரத்தில் ஆடும் வீடு !




தரையில் போதுமான அஸ்திவாரம் இருந்தாலே ஆட்டம் காணும் கட்டிடங்கள் நம் நாட்டில் அதிகம். ஆனால், கட்டிடத்தில் 60 சதவீதம் அந்தரத்தில் அமைக்கப்பட்டும் ஆடாமல் இருக்கிறது. இது நார்வே ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸ் என்பவரின் கைத்திறம்.

    வின்னி மாஸுக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தனது ஓய்வு வீட்டை வடிவமைக்க நினைத்த போது இடம் போதவில்லை. ஏனெனில், அவரது நிலத்தில் சுமார் 20 அடி அளவிலான பெரிய சரிவு ஒன்று இருந்தது. முதலில் அந்த சரிவினை நிரப்பி மேல்மட்டத்துடன் சமப்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், அவரது ஆர்க்கிடெக்ட் மூளை விழித்துக் கொண்டு பாதி நிலத்திலும், பாதி அந்தரத்திலும் ஏன் வீட்டை அமைக்கக்கூடாது? என கேள்வி கேட்கவே படத்திலுள்ள வீட்டை வடிவமைத்து கட்டியும் முடித்துவிட்டார்.
50 அடி நீளமும், 20 அடி அகலமும் உடைய இந்த வீடடில் 20 அடி நீளப்பகுதி உயர்மட்டத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 30 அடி நீளப்பகுதி யாதொரு தாங்கு தூண்களும் இன்றி  அந்தரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தில்லையா என ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிச்சயமாக நிலத்தில் ஊன்றியிருக்க வேண்டும் என்பது விதி. அதை இங்கு நான் தைரியமாக மீறியிருக்கிறேன். ஆனால், எவ்வித ஆபத்தும் இதற்கில்லை. ஏனெனில் அந்தரப் பகுதியில் இருக்கும் வீட்டிற்கான கவுன்டர் வெயிட்டை 6 கான்கிரீட் பில்லர்கள் கொண்டு நிலப்பகுதியில் ஏற்றியிருக்கிறேன்” என்கிறார் வின்னி மாஸ். கடல் அரிப்பிற்குப் பிறகு கடலோரம் கட்டப்பட்ட வீடுகள் இந்தியாவில் பெரும்பாலும் அந்தரத்தில்தான் ஆடும் என்பது வேறு விஷயம்.

ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்கு வீடு !


அஸ்திவாரம் போடுவதற்கே இரண்டு, மூன்று லட்சம் செலவாகும் இந்த காலத்தில்  வெறும் ரூ.6 லட்சத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் சென்னை ஐஐடி பொறியியல் துறையினர். அதுவும் வெறும் குடிசை வீடு அல்ல. கிட்டத்தட்ட 2000 ச.அடி பரப்புடைய இரண்டடுக்கு மாடி வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம்தான் செலவாகிறதாம். அதெப்படி? சிமெண்டும், கம்பியும், செங்கல்லும், ஆட்கள் கூலியும் விண்ணைத் தொடும் இந்த காலக்கட்டத்தில் இது சாத்தியமா? என நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இது முழுக்க முழுக்க வழக்கமான மூலப்பொருட்கள் அல்லாத வித்தியாசமான மூலப்பொருட்களைக் கொண்டு
கட்டப்பட்டிருக்கும் கட்டிடமாகும்.

“உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎஃப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமெண்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்துதான் இந்த வீட்டை அமைத்திருக்கிறோம்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம்தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய்விடுமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழிற்நுட்பம் நிச்சயம் பயன்படும்” என்கிறார் டாக்டர் தேவதாஸ் மேனன்.
பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்  போர் டுகளை  தயாரிக்கின்றன. எதிர்காலத்தில் தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.ஜி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும்.
ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கன்ட்ரோல் ரோலிங் ஷட்டர்கள் !




ரிமோட் கன்ட்ரோலுடன் கூடிய ரோலிங் ஷட்டர்களை மெட்டல் கிராஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலோகத்தினால் ஆன பலவகை கேட்கள், கிரில்கள், ஃபர்னிச்சர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மெட்டல் கிராஃப்ட் Metalcraft) பிரத்யேக டிசைன்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய ரோலிங் க்ஷட்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. நூறு சதவீத பாதுகாப்பு மிக்க இந்த க்ஷட்டர்களை வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம். இவை இரண்டு ஆண்டு உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

பாலிகார்பனேட் (Polycarbonate)), கல்வனைஸ்ட் அயர்ன் (Galvanized Iron), அலுமினியம் (Aluminium) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த ஷட்டர்கள், தரத்திலும், பாதுகாப்பிலும் சர்வதேச தரம் கொண்டவை ஆகும். ‘இன்ஃப்ரா ரெட் போட்டோ எலெக்ட்ரிக் டிடெக்டர்’ (Infra Red Photo Electric Detrctor) சாதனத்துடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல், அதிகபட்சமாக 60 மீட்டர் தூரத்திலிருந்து க்ஷட்டர்களை இயக்க உதவுகிறது.2 மீட்டர் முதல் 6 மீட்டர் உயரம் வரை உள்ள க்ஷட்டர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.
க்ஷட்டர்களில் இடம் பெற்றிருக்கும் ‘டி’ வடிவிலான நைலோஃபெல்ட் ((Nylofelt) அல்லது நைலான் கிளிப்கள் (Nylon Clips), லூப்ரிகண்ட்ஸ் (Lubricants)  மற்றும் கிரீஸ் இல்லாமல் எளிதாக க்ஷட்டர்கள் இயங்குவதை உறுதி செய்கின்றன. க்ஷட்டர் கதவுகளை, கையினாலோ, செயின் மூலமாகவோ அல்லது டி.சி. மோட்டார் உதவியாலோ சிறு சத்தம் கூட இல்லாமல், மிக வேகமாகஇயக்க முடியும். ஷட்டரின் உள்ளே மறைவாகப் பொருத்தப்பட்ட டிரைவ்  (Drive)  சாதனம், சத்தம் இல்லாமல் உதவுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கையினால் இயக்கும் முறைக்கு க்ஷட்டர் செயல்பாட்டை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த க்ஷட்டரில் தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் மூடிக்கொள்ளும் டைமர் (Timer)  வசதியும் உள்ளது. இதற்கு பேட்டரி பேக் அப் (Battery Back-up)  வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்புறம், வெளிப்புறம், அடிப்பகுதி என 3 இடங்களில் பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட மூன்றடுக்கு லாக் சிஸ்டம், பாதுகாப்புக்கு நூறு சதவீத உத்திரவாதம் அளிக்கவல்லது. வாடிக்கையாளர்களின் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, ஆக்சஸ் கன்ட்ரோல் சிஸ்டம் Access Control System), மேக்னட்டிக் சென்சார்(Magnetic Sensor) ஒலி எழுப்பக்கூடிய எச்சரிக்கை விளக்கு(Warning Light with Buzzer) ) போன்ற கூடுதல் கருவிகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

மனதை திருடும் 3D மேஜிக் !



மிகவும் பழமையான கலைதான் ஓவியம். அதிலும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் தரைகளிலும், சுவர்களிலும் வரையப்படும் ரசனையான ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். நாளடைவில் முப்பரிமாண ஓவியங்களாக உருமாறியதுதான் பெரிய திருப்புமுனை. அங்கு உருவாகும் அனைத்து வித குடியிருப்புகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கட்டிடங்களின் தரைகளில் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வுமிக்க ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் உள்ளூர் ஓவியர்கள். குடியிருப்பு வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் மகிழ்விப்பதற்கு கட்டிட மற்றும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களே இது போன்ற ஓவியங்களை வரையச் செய்கிறார்கள்.

ஓவியங்கள் என்றால் எப்போதும் நாம் பார்த்து பழகிபோன இயற்கை கண்காட்சி, அழகியல் சார்ந்த ஓவியங்கள் அல்ல. திடீரென நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் சுறா, நடைபயிலும் சிங்கம், ராட்சத பாம்பு, பாதாள சுரங்கம் போன்ற பலவகையான தோற்ற மாயைகளை ஏற்படுத்தும் முப்பரிமாண ஓவியங்களே வரையப்படுகிறது. சிறுவர்களை மட்டுமன்றி  பெரியவர்களையும் இது பெரிதளவு ஈர்க்கிறது.
இங்குள்ள படங்களை பாருங்கள்எது ஓவியம், எது அசல் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு எத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள்.

   நமது நாட்டிலும் குடியிருப்பு புராஜெக்ட்டுகள் உருவாக்கப்படுகின்றன. சுற்றிலும் இடம்விட்டு நமது பில்டர்கள் கட்டுகிறார்கள். கார்டனிங், குழந்தைகள் பூங்கா, ஜாகிங் ட்ராக் என இதெல்லாம் தவறாது உருவாக்குகிறார்கள். கூடவே இது போன்ற ரசனையைத் தூண்டும் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வைத்தால் அது வாடிக்கையாளரை பெருமளவு ஈர்க்கும் அல்லவா?

கலையழகு மிக்க கான்கிரிட் !


மரத்தில் செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கான்கிரீட்டில் செய்தால் எப்படி இருக்கும். இன்னும் அழகாக அமையும். நீண்ட காலம் உழைக்கும். கடினமாக இருக்கும். பூச்சி, ஈரம் போன்றவற்றால் பாதிக்கப்படாது. விலையும் குறைவாகவே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம்?

கான்கிரீட் பரப்பைப் பளபளப்பாக்கவேண்டும். அதற்கு முன் அந்தப் பரப்பின் மேல் ஸ்டென்சில் எனப்படும் அச்சுத்தாளைப் பரப்பிக் கொள்ள வேண்டும். இந்த அச்சுத் தாளில் நீங்கள் விரும்பும் வடிவத்தை இடம் பெறச் செய்யலாம்.
அச்சுத்தாளைக் கான்கிரீட் பரப்பில் ஒட்டிய பின் ஒரே நேரத்தில் செதுக்கி எடுக்கும் வேலையையும், பளபளப்பாக்கும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிற்பத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறீர்களா? பளிங்கில் இதைப் போல் செதுக்கி எடுப்பதற்கு ரூ.7 ஆயிரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். கான்கிரீட்டில் செதுக்கினால் ஒரே ஒரு ஆயிரம்தான் ஆகும். நம்ப முடியாத சிக்கனம்.
இந்த வேலைப்பாடுகளை அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கலாம். நடைபாதைகள், குளியலறைத் தரை போன்ற இடங்களில் கால்கள் வழுக்குகின்றனவா?
இந்த முறையைப் பின்பற்றி செதுக்கு வேலைகளைச் செய்தால் உராய்வை அதிகரிக்கலாம். வழுக்கிவிடுவதைக் குறைக்கலாம்.
உறுதியான, உடைந்து போகாத கலை வேலைப்பாடுகள் சாத்தியமாகும்.ஒளித் தடுப்புத் தேவைகளுக்கு ஏற்றது.
கணினியையும் பயன்படுத்தி விதவிதமான அச்செழுத்துக்களையும் வேலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். எந்த மொழி எழுத்துக்கள் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். உளுத்துப் போகுமோ? கறையான் பிடிக்குமோ? வார்னீஷ் அடிக்க வேண்டுமோ? என்று கவலைப் படத்தேவையில்லை.

இயற்கையிலேயே பற்பல எழிலான தோற்றங்களை உருவாகுமாறு செய்யலாம். இயற்கை வண்ணங்களை உபயோகிக்கலாம்.
சிமெண்டின் நிறத்தை விரும்பியபடி தேர்வு செய்யலாம். சாம்பல் நிறம், வெள்ளை, கலவை நிறங்களில் சிமெண்ட் வகைகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் செயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தலாம். இதில் எண்ணற்ற வண்ணங்கள் இருக்கின்றன. தந்தத்தைப் போன்ற நிறம், வெள்ளை, மஞ்சள், பழுப்பு, சாம்பல், கறுப்பு, ஆலிவ் பச்சை, மரகதம், நீலம் என்று எத்தனையோ வண்ணங்கள் சாத்தியம்.ஜல்லிகளிலும் விதவிதமான வண்ணங்கள் இருக்கின்றன. சிவப்பு, பச்சை, கருப்பு முதலிய நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகென்ன? அசத்துங்கள்!

கலவையை ஊற்றும் போது கவனியுங்க !



கலவையைக் கலந்து , தேவைப்படும் இடத்தில், முறையாகக் கொட்டிப் பரப்புவதைக் கான்கிரீட்டை ஊற்றுதல் என்று சொல்லலாம்.கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பிடலாம். இத்தகைய வேலைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. இந்தக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றினால்தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.

கான்கிரீட் இடப்படுவதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமையாக ஆராய வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் எந்த அளவுக்குச் செம்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்.பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். செய்யப்பட உள்ள வேலையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், ஒழுகி வீணாவதைத் தடுப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம்.

முட்டுக்கள் முறையான விதத்தில் பாரத்தைத் தாங்கக் கூடியவையா? சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா?  இணைப்புகள் உறுதியாக உள்ளனவா? என்று சோதிக்க வேண்டும்.கான்கிரீட் வந்து சேர்ந்துவிட்டதா? அவசரம் வேண்டாம். கான்கிரீட்டைச் சோதியுங்கள். அது தரமாகத் தயாரிக்கப்பட் டிருக்கிறதா? சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தாலொழியக் கான்கிரீட் இடும் வேலைகளைத் துவக்க வேண்டாம்.

இதற்கு என்ன வழி? நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். ஜல்லிகளின் அளவை எப்போதாவது திடீரென்று சோதித்துப் பாருங்கள். கலவையில் சேர்க்கப்படும் சிமென்ட் தரமானது தானா? விரும்பிய கிரேடு கொண்டதா? தயாரிப்பு நிறுவனம் எப்படி?  சிமென்ட் எவ்வளவு வேகத்தில் இறுகுகிறது? உறுதி எப்படி? சோதித்துப் பார்க்க வேண்டும்.

கான்கிரீட்டில் கட்டிகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் பரவுவது சீராக இருக்கும். உயரமான இடங்களுக்குப் பம்ப் செய்வதாக இருந்தாலும் அந்த வேலை தடையில்லாமல் நடக்கும். கான்கிரீட்டுக்குள் எந்த அளவிற்குக் காற்று இடம் பெற்றிருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். கலவையின் வெப்ப நிலை என்ன? எப்போது இறுகும்? எவ்வளவு நேரத்தில் உறுதி பெறும்? சன்னத் தன்மை எப்படி? வலு எப்படி? ஆராய வேண்டும்.கான்கிரீட் ஊற்றப்பட்ட பிறகும் உங்களுக்கு வேலை இருக்கத்தான் செய்கிறது.எங்கே கான்கிரீட்டை இட்டீர்களோ அந்த இடத்தைக் கவனமாகச் சோதியுங்கள். வெடிப்புகள் உருவாகி இருக்கின்றவா என்று விழிப்பாகப் பாருங்கள். எங்காவது சில சில்லுகள் பெயர்ந்து விழுந்திருக்கின்றனவா என்று ஆராயுங்கள். தேன்கூடு வடிவிலான குறைபாடுகளையும் கவனிக்கத் தவற வேண்டாம். ஒவ்வொன்றையும் கவனமாகச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் உற்றுப் பார்த்து குறைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். காற்று வெற்றிடங்கள் உருவாகி இருக்கலாம். கறைகள் படிந்திருக்கலாம். நிறம் மாறி இருக்கக் கூடும்.

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !


சில செங்கல்களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது..இரும்பைப் போல் இருக்கிறதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள். இரும்புச் செங்கற்களே வரப் போகின்றன.  உண்மைதான்.இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன்படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்காவில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவிலான கழிவை அப்படியே விட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கழிவை மூலப் பொருளாகக் கொண்டு கற்களைத் தயாரித்துக் கட்டுமானத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என்று குறிப்பிடுவார்கள். சாதாரணமாக இது
பாறாங்கற்களைப் போல் காணப்படும். இதற்குப் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று போட்டு வைத்துவிடுவார்கள். எங்காவது பள்ளங்களை நிரப்ப வேண்டி இருந்தால் அங்கு இதைக் கொண்டு போய்க் கொட்டிவிடுவார்கள்.  இது விலைமதிக்க முடியாத நல்ல கட்டுமானப் பொருளாக மாற்றப் படலாம் என்று இப்போது கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வேல்ஜ் ஸ்லாக்கில் இரும்பு இருக்கிறது. சுண்ணாம்பு இடம் பெற்றிருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடும் உண்டு.  மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளையும் காணலாம். இத்தனை நல்ல பொருட்களைக் கொண்டுள்ள இந்தக் கசடை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
கட்டுமானத்திற்கான கற்கள், ஓடுகள், பிற பீங்கான் பொருட்களைத் தயாரிக்க இதை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் முடிவாகும். இதை வணிக ரீதியில் கட்டுப்படியாகக் கூடிய விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றுவிட நேர்வது விரும்பத்தக்கதல்ல.  இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் தர நிர்ணய விதிமுறைகளின்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது.இரும்பாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்களும் ஓடுகளும் மிகச் சிறந்த வலுவைக் கொண்டவையாக இருப்பதால் இவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கனமான தாய்ச்சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கட்டுமான இயந்திரங்களை வாங்கும்போது !


நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் சில அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.வாங்குகிற இயந்திரம் தொல்லையற்றதாக இருக்க வேண்டும். எப்போதாவது இயங்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் நீங்களே சரி செய்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அல்லது விற்பனைசெய்த நிறுவனமே உடனடியாகத் தக்க ஆட்களை அனுப்பி வைக்குமா, துணை பாகங்கள் கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயக்குவதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்? இந்த எண்ணிக்கை அதிகமா? குறைவா? கட்டுபடியாகும் அளவுக்குள் இருக்க வேண்டும். மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதில் சிக்கனமாக நடந்து கொள்ளுமா? விரையங்கள் குறைவாக இருக்குமா? சேதங்கள் தவிர்க்கப்படுமா? வேறு பல இயந்திரங்களுடன் இணைத்து இயக்குவது சாத்தியமா?
தயாரிக்கப்படும் பொருட்கள் குறைவற்றவையாக அளிக்கப்படுமா? 100 பகுதிகளைத் தயாரித்துத் தரும் இயந்திரத்தின் அளிப்பில், எத்தனை பொருட்களில் குறை இடம் பெற்றிருக்கும்? அவற்றை வாடிக்கையாளர்கள் ஏற்க மறுப்பார்கள். இந்த வகையில் வீண் என்று ஒதுக்கப்படும் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. தயாரிப்புப் பொருளின் தரம் எப்போதும் நிலை நிறுத்தப்படுமா? அண்மைக் காலத்தில் ஏதாவது மாற்றங்கள் புகுத்தப்பட்டிருக்குமானால் அதை இயந்திரத்
திலும் ஏற்படுத்திக் கொள்ள வழி இருக்கிறதா? இப்போது செய்யும் வேலைக்குத் தேவை இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படுமா? காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டு இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்க முடியுமா? இயந்திரத்தின் ஆயுட் காலம் எவ்வளவு? ஆயுள் முடிந்தபின் அதை விற்க நினைத்தால் எவ்வளவு கிடைக்கும்? விற்கக் கூடிய விலை அதிகமாக இருக்குமா? அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்களா? ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் என்கிற கணக்கில் இயக்குவதற்கு எவ்வளவு செலவாகிறது? நிகரமாக நிற்கக் கூடிய லாபம் எவ்வளவு?

இயந்திரத்தின் விலை முழுவதையும் ரொக்கமாகவே கொடுத்து வாங்க வேண்டுமா? நிதி உதவி கிடைக்குமா? வங்கிகள் உதவிக்கு வருமா? தயாரிப்பு நிறுவனமே ஏற்பாடு செய்யுமா? வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்? சலுகை,
மானியம், தள்ளுபடி, இலவச இணைப்பு போன்ற வழிகளில் ஆதாயம் கிடைக்க வழி இருக்கிறதா?
விற்பனைக்குப் பிந்தைய சேவை எப்படி இருக்கும்? பராமரிப்புப் பணிகளுக்கு அதிகம் செலவிட நேருமா? இயந்திரத்தை இயக்குவதற்கு என்றே தனிப் பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டி இருக்குமா?
இதே வகை இயந்திரத்தை இதற்கு முன் யார், யார் வாங்கி இருக்கிறார்கள்? அவர்களைப் பார்த்துக் கருத்துக் கேட்க முடியுமா? அவர்களது அனுபவங்கள் உங்களுக்குப் பாடமாக அமைய வாய்ப்பிருக்கிறதா? இயந்திரத்தை நாமே பயன்படுத்துகிறோமா? வாடகைக்கு விட முடியுமா? எவ்வளவு வருவாய் வரும்? சொந்த உபயோகத்திற்கும் வாடகைக்கும் மாற்றி  மாற்றிப் பயன்படுத்துவது சாத்தியம்தானா?  இதெல்லாம் நன்கு ஆராயுங்கள்.

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் !


மூன்றே நாட்களில் சென்ட்ரிங் பணிகளை முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டுமா? அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தப் புதுமையான படைப்பை வழங்குபவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினர். கட்டுமானத் தொழிலுக்கான இயந்திரங்கள், சாதனங்களை உருவாக்கி அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.  இப்போது இவர்களது தயாரிப்புகள் இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

எந்த வேலைக்கு ஏற்றது?

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பலவிதமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாடிக் கட்டுமானங்களுக்கு இவை பெரிதும் பொருத்தமானவை. அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் இவை பேருதவியாக இருக்கும்.
தனித் தனி பாகங்களைக் குறிப்பிட்ட வகையில் இணைத்தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகிவிடும். இந்த வகையில் செயல்படும்போது ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையைத் துவக்குவதற்கு உரிய கால இடைவெளி மிக மிகக் குறைவாகவே ஆகும். எடை குறைவான பாகங்கள் என்பதால் இணைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் களைப்பின்றிப் பணியாற்ற முடியும். வேகமாகவும் செய்து முடித்துவிடலாம்.

தளங்களின் உயரங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதேபோல், கட்டட வடிவமைப்பும் சிக்கலானதாகவும் இருக்கலாம். அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலைகளை எளிதாக்குகின்றன.
வழக்கமான முறையில் அமைக்கப்படும் கட்டடத் தளங்களிலும், வழக்கத்திற்கு
மாறான தளங்களிலும் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். பல கட்டடங்களில் தளங்களின் உயரம் ஒரே மாதிரியாக அமைவது கிடையாது. அம்மாதிரியான கட்டுமானங்களில் சிரமமே இல்லாமல் வேலைகளைச் செய்வதற்கு
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே ஏற்றவை.

தேவைப்படும் நீளம் அல்லது உயரத்திற்கு மாற்றி  அமைத்துக் கொள்ள இவற்றி ல் உள்ள பின்களை வெளியில் இழுத்தாலே போதும். சரிக்கட்டிக் கொள்ளலாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத்தினால் வேலை முடிந்தது.
உலகப் புகழ் பெற்ற வேர்ல்ட் ட்ரேட் சென்டரைக் கட்டியவர்கள் யார் என்று தெரியுமா? கால்லவினோ குழுமம் என்ற நிறுவனம்தான். அவர்கள்தான் கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றி  வருகிறார்கள். இங்கும் இவர்கள் அடுத்தடுத்த வேலைகளை மூன்றே நாட்கள் இடைவெளியில் மேற்கொள்வதற்கு அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே உதவி இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட இதே மாதிரியான வேகத்தில் கட்டுமானவேலைகளை முடிக்க முடியும். எல் அண்ட் டி நிறுவனத்திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்தடுத்த வேலைகளை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்திருக்கிறது.
வெகு வேகமாக முடித்துவிட முடியும் என்பதால் காலமும் மிச்சமாகும். இது மறைமுக இலாபத்திற்கு வழி வகுக்கும். செலவு அடிப்படையில் கடுமையான சிக்கனத்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே போதும். பிரித்தெடுக்கும் வேலைகளை விரைவாகச் செய்துவிடலாம்.பாகங்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் கிரேன்களைப் பயன்படுத்த வேண்டிய நேரமும் குறைவாகவே ஆகும். கிரேன்களுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறைவாகவே ஆகும்.

பொருள் ஒன்று பயன் இரண்டு ஜெட்ரிவால் ஒட்டுபசை !..


ஒட்டுப்பசைகளை ஒட்டுகிற தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். இல்லை.
அதே பசையை நீர்க்கசிவைத் தடுப்பதற்குரிய பொருளாகவும் பயன்படுத்தலாம்.
இதில் கிடைக்கும் நன்மைகள் : ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கொண்டு செராமிக்(பீங்கான்) ஓடுகளை ஒட்டுவது எளிதானது. பிடி
மானமும் உறுதியாக இருக்கும். சிறு சிறு இடைவெளிகள், காலி இடங்களில் பழுதுபார்ப்பு, அலங்கரிப்பு நோக்கிலான ஒட்டு வேலைகளைச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டிய தட்டையான பலகைகளை ஒட்டுவதற்கும் இது பொருத்தமானது.வழக்கமான ஒட்டு வேலைகளுக்கு 15 முதல் 20 மி.மீ கனத்திலான ஒட்டுப்பரப்பு தேவைப்படும். ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை ஒரு மி.மீ கனத்திற்குப் பரப்பினாலே போதும். உறுதி ஒட்டு உறுதி.

எப்படிப் பயன்படுத்துவது?

ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மாற்றிச் செய்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.கடைகளில் வாங்கி வரும் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைத் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தண்ணீரை இதனுடன் சேர்க்கும் வேலையைத் தவிர்க்க வேண்டியது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இப்படிச் சேர்த்துக் கொண்டே வரும் போது ஓரளவு திடமான பசை வரும் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தண்ணீரில் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கலந்த பிறகு சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருங்கள். அவ்வாறு வைத்திருந்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான  கொலுத்துக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். கலவையைத் தேவைப்படும் இடத்தில் பரப்பிய பின் பொழியப்பட்ட கரண்டியைக் கொண்டு தேய்த்துவிட வேண்டும். இது ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைச் சிக்கனமாகப் பரப்ப உதவும்.  அதிகப்படி பசையைத் தேய்த்து எடுத்துக்கொண்டு வந்துவிடும்.

கலவையின் மேல் ஓடுகளை அழுத்திக்கொண்டு இலேசாகச் சுழற்றிக் கொடுக்க வேண்டும்.  ஒட்டப்படுவதற்கு முன் ஓடுகளையும், ஒட்டப்பட வேண்டிய பகுதிகளையும் நனைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஓடுகளைப் பதித்தபின் கரண்டிக் காம்பால் தட்டிக் கொடுக்கும் வேலைக்கும் தேவை இல்லை.  வழக்கமான ஒட்டு வேலைகளில் பின்பற்றப்படும் இம்மாதிரியான பல தேவைகளைத் தவிர்க்க முடியும் என்பதால் ஓடுகள் சிதைந்து வீணாவது குறையும். சிக்கனம் கிடைக்கும். நேரமும் உழைப்பும் கூலியும் மிச்சமாகும்.  வழக்கமான முறையில் ஓடு ஒட்டும் வேலைகளை மேற்கொள்வதைப் போல் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகப்படி வேலைகளை அதே நேர அளவிற்குள் முடித்துவிடலாம்.

ஒட்டும் தன்மை உறுதி மிக்கதாக இருக்கும். தண்ணீர்க் கசிவிற்கு இடமிருக்காது. ஒட்டப்படும் ஓடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய இடைவெளிகளை அடைக்க ஜெட்ரிவால் ஒட்டுப்பசை எஃப்எம் என்பதைப் பயன்படுத்தலாம்.இந்த வேலையைச் செய்து முடிக்க வெள்ளை நிறப் பசையைப் பயன்படுத்த வேண்டி வரும். ஒட்டப்பட்ட ஓடுகளின் நிறத்துடன் இது மாறு
பட்டு இருக்குமே.. அழகைக் கெடுக்குமே என்றும் கவலைப்படத் தேவையில்லை.ஓட்டின் நிறத்தைப் போலவே ஒட்டுஇடைவெளிகளையும் நிறமேற்றிவிட முடியும். இதற்குப் பல வித வண்ணங்களில் ஸ்டெயினர்கள் கிடைக்கின்றன.

மாடர்ன் தொழிற்நுட்பம் மாடுலர் பேனல் சிஸ்டம் !



கட்டுமான உத்திகளுள் குறிப்பிடத் தக்கது எம்பிஎஸ் என்னும் முறை. மாடுலர் பேனல் சிஸ்டம்  (Modular
Pannel System)  என்பதைத்தான் சுருக்கமாக எம்பிஎஸ் என்று குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனம் இத்தகைய எம்பிஎஸ் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இவர்களது தயாரிப்புகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உண்டு. இந்தியாவிலும் இவர்களது சேவை தேவை என்று பல வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்று பாஸ்சல் நிறுவனம் தனது கிளையை ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் துவக்கி இருக்கிறது. இவர்களது உற்பத்தி ஆலை விசாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

சிறப்பம்சங்கள்:

எம்பிஎஸ் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட பேனல்களைத் தயாரித்துத் தருகிறது.  இவை உறுதி மிக்கவை. நீடித்து உழைக்கக் கூடியவை. இவற்றைத்  தயாரிப்பதற்கு 6 மி.மீ தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை எளிதில் அரிப்பிற்குள்ளாகாத உயர்ந்த தரம் உடையவை. இந்தப் பாளங்களின் முகப்புப் பகுதியில் தரம் உயர்ந்த பின்லாந்து நாட்டின் பிர்ச் மர பிளைவுட் பலகைகளைப் பொருத்தி இருக்கிறார்கள்.  கன மீட்டருக்கு 780 கிலோ என்ற அளவிலான அடர்த்தி கொண்டவை இவை.  ஆகவே உறுதிக்குக் குறைவில்லை.
இந்தப் பிளைவுட் பலகைகளின் மேற்புறத்தில் பீனால் அடிப்படையிலான பிசினைக் கொண்ட பூச்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பிளைவுட் பகுதிகளின் விளிம்புகள் சேதம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக இரும்புத் தகடுகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பேனலுக்கும் மற்றொரு பேனலுக்கும் சட்டங்கள் மற்றும் புறப்பரப்பிற்கு இடையில் இடைவெளியை அடைக்கத்தக்க விதத்தில் பொருத்தமான நிரப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இணைப்புகளுக்கு இடையில் கசிவே ஏற்படாது.இந்த வகைப் பேனல்களை அதிகத் தடவைகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.  சுமார் 300 தடவைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சட்டங்கள் இரும்பினால் ஆனவை என்பதால் அவற்றின் ஆயுளும் நீண்ட காலம் நீடிக்கும்.
நேரான சுவர்கள், வட்ட வடிவச் சுவர்கள்,கிணறு போன்ற பள்ளம், தூண் எதை வேண்டுமானாலும் எம்பிஎஸ் மூலம் உருவாக்கலாம். கான்கிரீட்டைக் கலந்ததும் உடனடியாகக் கொட்டிக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ள எந்த வேலைக்கும் இந்த தொழிற்நுட்பம் ஏற்றது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பெரிய பெரிய திட்டங்களுக்கு இந்த முறையைப்பின்பற்றுவது பெரிதும் பலனளிக்கும். பெரிய தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கால்வாய்கள், பாலங்கள், அணைகள் என எதை
வேண்டுமானாலும் கட்டுவதற்கு எம்பிஎஸ் ஏற்ற முறையாக இருக்கும்.

சோலார் பெயிண்டும் சோலார் கொடியும் !


ஒவ்வொரு வீட்டிலும் சோலார் மின்சாரம் தயாரிக்க அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தினாலும், அது நடைமுறையில் பொருளாதார சிக்கல்களை உடையதாக இருப்பதால் பெரும்பாலும் பரவலாக்கப்படாமல் இருக்கிறது.ஆனால், தற்போது கட்டுமானத்துறையில் பரபரப்பாக பேசப்படுவது திரவ நிலையில் சோலார் பேனல்கள்.
அதாவது,சோலார் பெயிண்டுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது பற்றிதான்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.தரையிலும்,சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின் உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியபோது:

  “ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால்  அதிகசெலவு ஏற்படுத்தக்கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும், செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின் உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்” என்று
கியாவ்கியாங் கான் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நியூயார்க்கில் இன்னொரு குழுவினர் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

உங்கள் வீட்டு கூரை பாதுகாப்பானதா?



நமது வீட்டுக்கூரை அமைக்கும்போது முக்கியமான சில விஷயங்களை அலசி ஆராய்வோம்.வெப்பத்தைத் தடுக்க வேண்டும். நீர்க்கசிவு இருக்கக்கூடாது. கரைகள் ஏற்படுத்தக்கூடாது, பாசிகள் படரக்கூடாது, முக்கியமாக வழுக்கக்கூடாது. ஆனால், நாம் வாங்கும் கூரை கட்டுமான பொருட்களுக்கு (டைல்ஸ்) இவற்றில் ஒரு தன்மை இருந்தால், இன்னொரு தன்மை இருக்காது. ஆனால், இந்த அனைத்து தன்மைகளும் ஒருங்கே பெற்ற புதிய டைல்தான் ரூஃப் ப்ளஸ் டைல்கள்.

100 சதவீத வெதரிங் கோர்ஸ் டைலான ரூஃப் ப்ளஸ் டைல்களைத் தயாரித்து அளிக்கும் ராசி டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான
திரு.சந்திரசேகரை கேட்ட போது  ‘‘வீடு கட்டும் சாதாரண மக்கள் தங்கள் கூரைகளை பாதுகாப்பாக அமைக்கத் தவறி விடுகிறார்கள். கூரை என்பது வெப்பத்தை தடுப்பதற்கும், நீர்க்கசிவு ஏற்படாமல் காப்பதற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்டிடத்தின் உறுதியை
காப்பாதாக அமைய வேண்டும். அதாவது, சாதாரண கூரை தளங்கள் 1 ச.அடிக்கு 15 முதல் 17 கிலோ எடையுள்ளதாகவும், அதுவே மழைக்காலத்தில் 20 கிலோ எடையுள்ளதாகவும் கனக்கிறது. ஆனால், ரூஃப் டைல்கள் கொண்டு கூரை அமைக்கும்போது எல்லா காலங்களிலும் அதிகபட்சம் 7 கிலோவிற்கு மேல் கனம் இருக்காது.
எனவே, கட்டிடத்திற்குத் தேவையற்ற கனத்தை கொடுக்காததும், சூடான வெப்பக் கதிர்களை உள் வாங்காததும், அறைகளின் குளுமையை வெளியே கடத்தாததும், நீர்க்கசிவிற்கு ஒரு துளியும் இடம் கொடுக்காததுமான வெகு சிக்கனமிக்க பசுமைக்கட்டிட பொருளான ரூஃப் ப்ளஸ் டைல்கள் உங்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான கூரையை தரும் என்பதில்
ஐயமில்லை’’.

கூரைகளுக்கு ரூஃப் ப்ளஸ் டைல்களை பொருத்தும் முறை பற்றி...
‘‘பழங்காலம் போல, சுண்ணாம்பு பவுடர், கடுக்காய் போன்ற பல பொருட்களைக் கொண்டு நாள் கணக்கில் வெதரிங் கோர்ஸ் அமைக்க இனியும் தேவை இருக்காது. சாதாரண கான்கிரீட் தளம் மீது நமது டைல்களை அமைக்கலாம். முதலில் ரூஃப் ப்ளஸ் டைல்களை சுத்தமான நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். தளங்களின் மேற்பரப்பை சீர்படுத்தி, சிமெண்ட் கலவையை பூச வேண்டும். (எங்களிடம் உள்ள விசேஷ மான ரசாயன பூச்சை டைல்களின் இடையில் கிரௌட்டிங் மீது பூசிவிட்டால் நீர்க்கசிவு இருக்காது).

   பிறகு ரூஃப் ப்ளஸ்டைல்களை ஒட்டிவிட்டால் அவ்வளவு தான், வேலை முடிந்தது’’ என்றார்.
ஐ.ஜி.பி.சி (இந்தியன் கிரீன் பில்டிங் ஹவுசிங்) சான்றிதழ் பெற்ற இந்த ரூஃப் ப்ளஸ் டைல்கள் ஒரு சதுர அடி அளவில் பல வண்ணங்களில் கிடைக்கின்றன என்பதாலும், கூரைகளில் பொருத்துவது எளிது என்பதாலும் இதற்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது.
கட்டுநர்கள் தங்களது புராஜெக்டுகளில் பயன்படுத்த மிகவும் உகந்தது  ரூஃப் ப்ளஸ் டைல்ஸ்கள் என்பதோடு அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் கட்டுநர்களுக்கு வெகு சிக்கன விலையில் கிடைக்கிறது ரூஃப் ப்ளஸ் டைல்கள்.

கான்கிரீட்டில் அரிப்பா கவலையை விடுங்க...


கான்கிரீட்டில் விரிசல் என்பது போலவே அரிப்பு என்பதும் பெரும் தொல்லை. ஆனால் அதற்கு தற்போது  ஜென்ட்ரிஃபிக்ஸ் என்னும் வேதியியல் தயாரிப்பு வந்துவிட்டது.கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாகச் செயல்
படுவது அரிப்பு. வேதிப்பொருட்களால் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்பு ஆகிய தொல்லைகளை அறவே ஒழிப்பதற்கு ஜென்ட்ரிஃபிக்ஸ் வந்துவிட்டது.

இது தாது அடிப்படையிலான ஒரு சேர்மானப் பொருள். அரிப்பைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பழைய கட்டுமானங்களைப் பழுதுபார்க்கும் தேவைகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை வேறு எந்தவிதக் கரைப்பான்களுடனும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது இல்லை.

எப்படிச் செயல்படுத்துவது?

ஜென்ட்ரிஃபிக்ஸ் கொண்டு அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு செய்து விட்டீர்கள் என்போம்.  பாதுகாப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை முதலில் ஈரமாக்க வேண்டும். ஈரமாக  இருக்க வேண்டும் என்றுதான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.
ஜென்ட்ரிஃபிக்ஸை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டியதுதான். தண்ணீருடன் கலக்கும் வேலையைச் செய்யும் நேரத்தில் தொடர்ச்சியாகக் கலக்கிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சீரான கூழ் போன்ற பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். கட்டிகள்  தேங்கக் கூடாது. கரைப்பு வேலையைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.இது ஐந்து நிமிடத்திற்குள் முடிந்து விடக் கூடிய வேலைதான். அலட்சியம் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். மெதுவாகச் சுழன்று கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

என்ன விகிதத்தில் கலப்பது?

கலக்கப்படும் கலவை எந்த அளவு பக்குவத்தில் அமைய வேண்டும் என்பதற்கேற்ப பொறுமையாகக் கலக்கிக் கொண்டு வர வேண்டும். அதிகமாக நீர்த்துப் போகவும் விடக் கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பரப்புவது எப்படி?

பெயின்ட் அடிப்பதைப் போல் அடிக்க வேண்டியதுதான். இதற்குப் பொருத்தமான பிரஷை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் உடற்பகுதியை நன்கு மூடும்படி கலவையைப் பூச வேண்டும். இவ்வாறு இரண்டு கோட் அடிப்பது அவசியம். கம்பிகள் குறுக்கும் நெடுக்கமாக அடுக்கப்பட்டுக் கட்டுக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருப்பது வழக்கம். கலவையைக் கம்பிகளின் மேல் பூசும்போது இந்தக் கட்டுக் கம்பிகளின் மேலும் கலவை பூசப்படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இது அரிப்பை அண்டவிடாமல் செய்வதற்கான கவசத்தை அணிவிப்பது போன்ற வேலை. தவிரவும், இணைப்புகளை மேலும்
உறுதியாக்கவும் உதவும். இந்தத் தேவைகளுக்காகவே ஜென்ட்ரிஃபிக்ஸ் பூசப்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் பிரஷ்கள் விசயத்திலும் கவனமாக இருங்கள். குச்சங்கள் குட்டையானவையாக அமைக்கப்பட் டிருக்கும் பிரஷ்களையே பயன்படுத்துங்கள்.முதலில் ஒரு கோட் அடித்து முடித்த பிறகு இரண்டாவதாக இன்னொரு கோட் அடியுங்கள். முதல் கோட் பாதுகாப்பதற்கு. இரண்டாவது கோட் பழுதுபார்க்கும் வேலைகளுக்காக.
ஜெர்மானிய தொழிற்நுட்ப ஒத்துழைப்போடு ஜென்ட்ரி ஃபிக்ஸை மெக் பாக்கெமி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து அளிக்கிறது.

கான்கிரீட் தரைகளை காக்கும் ரெட்ரோ பிளேட்-REDRO PLATE


கான்கிரீட் தரைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட வேண்டுமா?
ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் தரையை மாற்றி  அமைக்க வேண்டிய தேவை வரக்கூடாதா?அடிக்கடி கான்கிரீட் தரையைப் பராமரிப்பு வேலைகளுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறதா?
ஒரே மாதிரியான கான்கிரீட் தரையை நீண்ட காலம் பார்த்துக் கொண்டிருப்பதால் சலிப்பு ஏற்படுகிறதா?
உங்கள் அத்தனை சிக்கல்களையும் தீர்க்க வந்துவிட்டது ரெட்ரோ பிளேட் 99.  இது என்ன என்று புரியவில்லையா? புதிய கான்கிரீட் தரையாக இருந்தாலும் சரி..பழைய கான்கிரீட் தரை என்றாலும் சரி. ரெட்ரோ பிளேட் 99, பளபளப்பான கான்கிரீட் பரப்பை உருவாக்கிக் கொடுக்கும். நீங்கள் இதுகாறும் அனுபவித்து வந்த தொல்லைகள் எதுவும் இருக்காது.

எப்படி வேலை செய்கிறது?

ரெட்ரோ பிளேட் 99இல் இடம்பெற்றுள்ள வேதிப் பொருட்கள் ஈரத்தன்மையை நீண்ட காலம் நிலைநிறுத்துகின்றன. இதனால் கான்கிரீட் கலவையைக் குலுக்கிவிடுவதற்கான தேவை குறையும். கான்கிரீட் பரப்பில் ஈரம் நிலைநிறுத்தப்படுவதால் கட்டுமானக் கலவை நன்றாக உள்ளிழுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆவியாவதால் ஏற்படும் இழப்பு குறைக்கப்படுகிறது. தரைப்பரப்பு எந்த அளவுக்கு பளபளப்புக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்ற வகையில் தேய்த்துப் பளபளப்பாக்கும் உத்திகளைப் பின்பற்றலாம்.தரையின் தேய்
மானத்தைக் கட்டுப்படுத்தலாம். உராய்வுகளால் ஏற்படும் சேதத்தை எதிர்க்கும் திறனை நான்கு மடங்கு வரை அதிகப்படுத்தலாம். தரையின் மீது படும் ஒளியைத் திருப்பிப் பிரதிபலிக்கும் திறன் 30 விழுக்காடு வரை கூடுதலாகும். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளை எரித்தாலும் நல்ல வெளிச்சம் கிடைக்கும். மின்சாரத் தேவை குறையும். கட்டணத்தில் சிக்கனம் ஏற்படும்.

பழைய தரைகளைப் புத்தம் புதியதைப் போல் மாற்றி  அமைக்கலாம். குறைந்தபட்சப் பராமரிப்பே போதுமானதாக இருக்கும். தரையின் மீது கனமானபொருட்களை இழுத்துச் செல்வதால் ஏற்படும் கீறல்கள் தோற்றத்தின் அழகைக் கெடுக்காத வகையில் தவிர்க்கப்படும். கறைகள் படிவதும் மட்டுப்படுத்தப்படும். இதனால் தரைகள் எப்போதும் பளிச்சென்று சுத்தமாகவே வைத்துக் கொள்ளப்படும். நீண்ட கால உழைப்பையும் உறுதி செய்யலாம். குறைந்த செலவில் பயன்படுத்தலாம்.

விற்கப்படும் நிலையில் வாங்கி வருவதை வேறு வகைகளில் நீர்ப்பதற்கும் அவசியம் இல்லை. அப்படியே தயார் நிலையில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தரையின் உறுதியை இறுக்கம் மிகுந்ததாக ஆக்குகிறது.
கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாகிக் காற்றில் கலக்கும் நச்சுப் பொருள் வகை எதுவும் ரெட்ரோபிளேட்டில் கிடையாது. இதனால் உடல் நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. பதினைந்து வருட காலத்திற்கு உத்தரவாதமும் தருகிறார்கள்.
பசுமைக் கட்டுமான விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. எனவே பசுமைக் கட்டுமான தரச்சான்று பெறுவதில் தடை இருக்காது.

ஜெர்மன் தொழிற்நுட்பம் - GERMAN TECHNOLOGY


மேற்கு ஜெர்மனியில் ஸ்டீன்நாக் என்ற நகரில் 1964 ஆம் ஆண்டு பாஸ்சல் என்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள உத்திகளை உலகம் முழுவதும் கட்டுமானத் துறையில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.இப்போது இந்தத் தொழிற்நுட்பம் இந்தியாவிற்கும் வருகிறது.பாஸ்சல் நிறுவனம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றதாகும். உலகம் முழுவதும்
சுமார் 60 நாடுகளில் இவர்கள் கட்டுமான நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

பாஸ்சல் டெக் சிஸ்டம் உத்தரங்களை அமைப்பதற்கு இந்த வழிமுறை மிகவும் பொருத்தமானது. வெவ்வேறு கனம் கொண்ட கான்கிரீட் பாளங்களை உருவாக்குவதற்கும் கையாள்வதற்கும் வசதியானது.  பெரிய, நீளவாக்கிலான உத்தரத்திற்குக் குறுக்காக, சிறிய உத்தரங்களை அமைப்பதற்கு இதை பயன்படுத்துவது எளிது.

ஒரே பாகத்தை இரண்டு திசைகளிலும் பயன்படுத்தலாம். குறுக்காகவும், நெடுக்காகவும் தாங்கப்பட வேண்டிய பகுதிகளுக்கு இது பெரிதும் வசதி அளிப்பதாக இருக்கும். அறைகளின் அளவுகள் எப்படி வேண்டுமானாலும் வேறுபடலாம். அதற்கேற்ற விதத்தில் தனித்தனிப் பகுதிகளாக அமைத்துக் கொள்ள பாஸ்சல் டெக் சிஸ்டம் வசதி அளிக்கிறது. தேவைக்கேற்ற நீளத்திற்கு நீட்டிக் கொள்வதும் எளிது.
பாஸ்சல்  ஈ   டெக் ,ஈ டெக் என்பது கான்கிரீட் ஸ்லாப் அமைப்பு வேலைகளை வெகு எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவும் ஒரு நவீன தொழிற்நுட்பம்.

 மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இது.பேனல் அமைப்பு முறையில் இது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இதன் அதிகபட்ச உயரம் 7.5 செ.மீ மட்டுமே. இதன் முகப்பகுதி ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 12 மி.மீ கனம் கொண்ட பிளைவுட் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த வகைப் பேனல்கள் எடை குறைவானவை. கையாள எளிதானவை. உறுதி உள்ளவை. இருபது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவை என்பதால் எடுப்பதும் தொடுப்பதும் எளிதாக இருக்கும். இவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு தொழிலாளர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களது உற்பத்தித் திறனும் உயர்ந்த அளவில் இருக்கும்.

இதில் உள்ள இன்னொரு நன்மை என்னவென்றால் இதற்குக் கிரேன் வசதிகள் தேவைப்படாது. ஆட்களைக் கொண்டே அமைக்கலாம்.வேலைகள் நடக்கும் போது விபத்து எதுவும் நேர்ந்துவிடாத வகையில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். இது இவர்களது வடிவமைப்பு நேர்த்தியைக் காட்டுகிறது. ஸ்லாப்களைஅமைப்பதை விளையாட்டு போல் செய்து முடிக்க ஈ டெக் ஏற்றது. ஒரு அடி கனம் கொண்ட ஸ்லாப்களைக் கூட எளிதாக அமைக்கலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. கிடைமட்ட நிலையில் ஸ்லாப்கள் அமைக்கும் பணிக்கும் ஈ டெக் மிக மிகப் பொருத்தமானது.

கிடைக்கும் அளவுகள்

60X125, 45X125, 30X125, 60X120, 45X120/ 30X120, 60X90,60X85,60X60,30X 60என்ற அளவுகளில் ஈ டெக்குகள் கிடைக்கின்றன. அறைகளின் அளவுகள் விதவிதமாக மாற்றி  அமைக்கப்பட வேண்டிய தேவை வரலாம். அதனால் ஒன்றும் குறை ஏற்படப் போவதில்லை. 5 செ.மீ வரையிலான சின்னச் சின்ன மாற்றங்களைத் தகுந்த விதத்தில் உள்ளடக்கி இணைத்துக் கொள்ளலாம்.
பாஸ்சல் நிறுவனத்தின் ஐ டென்ட் என்ற உத்தி வேறு எந்த நிறுவனமும் அறிமுகப்படுத்தாத ஒன்று என்றே கூறலாம்.

உலர் சுவர் என்றொரு உயரிய தொழிற்நுட்பம் ! DRY WALL TECHNOLOGY


உலர் சுவர் (ட்ரை வால் )எனும் புதிய தொழிற் நுட்பத்தை 1917 ஆம் ஆண்டிலேயே கண்டு பிடித்து விட்டார்கள். இந்தியாவில் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

செயல்படுத்துவது எப்படி?

உலர் சுவர் அமைக்கும் முறையைப் படிப்படியாகக் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக ஜிப்சம் உப்பை எடுத்துக் கொண்டு அதைச் சூடேற்ற வேண்டும். நன்கு அரைக்கப்பட்ட நிலையில் ஜிப்சம் இப்படி வறுத்து எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சூடேற்றும்போது ஜிப்சம் உருகி இளகி ஒரே கட்டியாக உருமாறும். இந்த மாற்றம் நிகழும்போது அதிக அளவு கரியமில வாயு வெளிப்படும். இது புவி வெப்பமயமாவதை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும். இந்த வகையிலான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு ஏற்படும் சுற்றுச் சூழல் மாசைக் குறைப்பதற்கு உலர் சுவர் முறை பெரிதும் கை கொடுக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சன்னிவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சீரியஸ் மெட்டீரியல்ஸ் என்ற நிறுவனம் எக்கோராக் என்ற கட்டுமானப் பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதை உற்பத்தி செய்வதற்கு வெப்பம் வேண்டியதில்லை. மூலப் பொருட்களையும் முதன் முறையாக வெட்டி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய தேவை குறைவு. பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தலாம்.

தேவைப்படாத, தொழிற்சாலைக் கழிவுகளையே 85% வரை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.
எரிசாம்பல், உலைக்களத் தூசி, கசடு, ஆலைக் கழிவுகள் போன்றவற்றையே மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இவற்றைத் தண்ணீருடன் கலந்து அச்சுக்களில் வார்த்துத் தகடு வடிவில் உற்பத்தி செய்யலாம். இதற்கு எந்த விதத்திலும் வெப்பம் தேவைப்படாது. வழக்கமான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பகுதி இருந்தாலே போதும். எவ்வளவு மிச்சம் பாருங்கள்.
ஜிப்சம் பலகைகளைத் தயாரிப்பவர்கள் ஜிப்சத்தை அரைத்துச் சூடேற்றி  அதனுடன் செல்லுலோஸ் ,
ஸ்டார்ச் ஆகிய தாவர அடிப்படையிலான பொருட்களைக் கலப்பார்கள். இவை பலகைகளில் இடம் பெற்றிருப்பதை அந்துப் பூச்சிகளும் கறையான்களும் எளிதில் மோப்பம் பிடித்துவிடும். அரித்துத் தின்று விட ஆரம்பிக்கும்.
எக்கோ ராக்கில் இது மாதிரியான பொருள் எதுவும் இல்லவே இல்லை. எனவே, இதைக் கொண்டு உருவாக்கப்படும் பகுதிகளில் கறையான் தின்று ஓட்டையாகும் கோளாறு ஏற்பட வழி இருக்காது. பூஞ்சை படராது. பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவு.
பராமரிப்புச் செலவும் அதே அளவுக்குக்  குறையும்.

அமெரிக்காவில் இந்த உலர் சுவர் மூலப் பொருட்களால் கிட்டும் நன்மைகளை வெகுவாக உணர்ந்திருக் கிறார்கள். வட அமெரிக்காவில்
மட்டுமே இந்த வகையில் 85 பில்லியன் சதுர அடி உலர் சுவர்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.
கட்டுமானச் செலவை குறைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் நமக்கு இது மிகவும் தேவைதான்.

அடுத்த தலைமுறை தொழிற்நுட்பம் ! ஆக்டிவ் டே லைட்டிங் ! ACTIVE DAY LIGHTING



என்ன அது ஆக்டிவ் டே லைட்டிங்?
இயற்கையாகக் கிடைக்கும் பகல் வெளிச்சத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வதுதான் இதன் நோக்கம்.வழக்கமாகச் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சூரிய ஒளிமின்கலப் பட்டைகளைக் கூரைப் பகுதியில் அமைப்பார்கள். இவை, சூரிய ஒளியை உள்வாங்கி அதனை மின்சாரமாக மாற்றிக் கொடுக்கும். இந்த மின்சாரத்தைக் கொண்டு விளக்குகளை எரிப்பது, காற்றாடிகளைச் சுழலவிடுவது போன்ற வேலைகளைச் செய்து கொள்வோம்.அதற்குப் பதிலாக, ஒளிஇழை வடங்களை ( ஆப்டிக் ஃபைபர் கேபிள்) உபயோகிக்கலாம். இவை சூரிய ஒளியை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த ஒளியை வேறு பல இடங்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும். நேரடியாகச் சூரிய ஒளி பட வாய்ப்பில்லாத, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு வெளிச்சத்தை அளிக்கும்.

சூரிய மின் கலப் பட்டைகளையும் ஒளி இழை வடங்களையும் ஒரே சேர அமைக்கும் உத்தியை ஆக்டிவ் டே லைட்டிங் என்று சொல்லலாம்.கூரை மேல் கண்ணாடியைப் பதித்து வைத்தால் அதன் வழியாகச் சூரிய வெளிச்சம் உள்ளுக்குள் வந்துவிட்டுப் போகிறது.. இதற்குப் போய் எதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டும் என்று கருதுவீர்கள். 

இது சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள எளிமையான வழிதான். ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் கூரையில் பதித்து வைத்திருக்கும் கண்ணாடி அதே இடத்தில்தான் இருக்கும்.  சூரியன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே போகும். இதனால் என்ன ஆகும்? அறைக்குள் விழும் வெளிச்சத்தின் கோணம் மாறும். அளவும் மாறும். சில  நேரங்களில் வெளிச்சம் விழாமலேயே கூடப்போய்விடலாம்.இதற்குப் பதிலாக, சூரியன் நகர, நகர அதைத் தொடர்ந்து பின்பற்றும் ட்ராக்கர் என்ற சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்போது சூரியனின் போக்கைப் பின்பற்றிக் கண்ணாடியும் நகரும். அறைக்குள் தொடர்ந்து வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்க வழி ஏற்படும்.

கூரையிலாகட்டும், சுவர்களிலாகட்டும் ஆங்காங்கே திறப்புகளை ஏற்படுத்தினால் வெளியில் உள்ள வெளிச்சம் தன்னால் உள்ளுக்குள் வரப் போகிறது.. இதற்குப் போய் எதற்கு ஒளி இழை வடம் என்று கேட்க நினைப்பீர்கள்.நீங்கள் சொல்வது போல் சுவர்களிலும் கூரைகளிலும் திறப்புகளை ஏற்படுத்தலாம்தான். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் அந்தந்த அறைகளில் வேண்டுமானால் வெளிச்சம் உள்ளே வரலாம். அடுத்தடுத்து உள்ள, கட்டடத்தின் உட்பகுதிகளுக்கு அதைக் கொண்டு செல்ல இயலாது. அப்படியே கொண்டு சென்றாலும் அதன் அளவும் அடர்த்தியும் குறைந்து போகும்.அடுக்கு மாடிக் கட்டடங்களில் அடுத்தடுத்த தளங்கள் வந்துவிடும் என்பதால் கூரைப் பகுதியில் திறப்பு வைப்பது என்பது இயலாத காரியம்.

ஒளி இழை வடங்களை எங்கு வேண்டுமானாலும் வளைத்து நெளித்து எடுத்துச் செல்லலாம். சிறு துளைகள் வழியாகவும் நுழைத்துக் கொண்டு செல்லலாம்.குறுகலான வளைவுகளைக் கடந்தும் வெளிச்சம் தங்கு தடையின்றிப் பயணிக்கும். இரண்டே இரண்டு அங்குல விட்டம் கொண்ட பகுதிகள் என்றாலும் இத்தகைய மடிப்புக்களால் ஒளியின் பயணம் தடைப்படாது.

சூரிய ஒளி படுகிற இடத்தில் இருந்து, பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிக்கு ஒளி இழை வடம் மூலம் கொண்டு சென்றுவிடுகிறோம் என்று வையுங்கள். அங்கு இந்த ஒளியை விதவிதமான தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜிசிடி வளைகுடா நாட்டு தொழிற்நுட்பம் !


ஜிசிடி என்பது கல்ஃப் கான்கிரீட் டெக்னாலஜி(Gulf Concrete Technology)  என்பதன் சுருக்கமாகும். போர்டோரிகோ நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கார்மெலோ குழுமம்.

இவர்கள்தான் ஜிசிடி தொழிற்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் கிடைக்கக் கூடிய
தனித் தன்மை வாய்ந்த கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது  நன்மை தர வல்லது.
முன்னதாகவே கட்டடப் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் பொருத்த வேண்டும். இதுதான் இதில் அடிப்படையான விசயம். முப்பரிமாண வடிவில் எடைகுறைவான பகுதிகளை உருவாக்குவது இந்தத் தொழிற்நுட்பத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது.

விரிவாக்கப்படும் பாலிஸ்டைரீன் கொண்டு பகுதிகளை அமைக்கிறார்கள். இரண்டு வலுவான பலகை போன்ற இடைவெளிகளுக்கு நடுவில் பாலிஸ்டைரீன் இடம்பெறச் செய்யப்படுகிறது. கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு வலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பாலிஸ்டைரீனை வைக்கிறார்கள்.
மேலும் உறுதி சேர்ப்பதற்காக, வெளியில் இருந்து இரும்பு ட்ரஸ்களைப் பாலிஸ்டைரீனுக்குள் செலுத்துகிறார்கள். இவற்றை வெளிப்படலத்தில் உள்ள இரும்பு வலைகளுடன் பற்ற வைப்புச் செய்துவிடுகிறார்கள்.
இந்தத் தகட்டின் தடிமன் 10 காஜ் அளவுக்கு உள்ளது.

இதனைக் கொண்டு போய்க் கட்டுமானம் நடைபெற வேண்டிய இடத்தில் நிறுத்துகிறார்கள். வலுவான கான்கிரீட் கலவையை இதன் இரண்டு பக்கங்களிலும் இயந்திரங்களைக் கொண்டு தெளிக்கிறார்கள்.சுவர்கள், கூரைப் பகுதிகள் போன்றவை விரைவாக உருவாகிவிடுகின்றன.இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல நன்மைகளைப் பெறலாம். ஜிசிடி இன்சுலேட்டட் கான்கிரீட் பேனல் பில்டிங் சிஸ்டம் என்பது ஒட்டுமொத்த உத்தியாகும்.இதைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டடங்களின்  மீது காற்று கடும் வேகத்துடன் மோதினாலும் கட்டடத்திற்கு ஒன்றும் ஆகாது. இந்த வகைக் கட்டடங்கள் மணிக்கு40 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் வீசக் கூடிய சூறாவளிக் காற்றுகளையும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருக்கும்.

மேலும் , நில நடுக்கத்தையும் தாங்கி நிலைத்து நிற்கக் கூடிய கட்டடங்களைக் கட்ட முடியும். ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய கட்டடங்களை ஜிசிடி தொழிற்நுட்பத்தின் மூலம் அமைக்கலாம்.வெப்பத்தினால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கலாம். எரிச்சலூட்டக் கூடிய இரைச்சலையும் மட்டுப்படுத்தலாம்.
வளைகுடா நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்த எந்த நாட்டுக்கும் இது ஏற்றது.

இம்பாலா காரில் இன்டீரியர் ஆர்கிடெக்சர் !



ஜாலியாக காரை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் டூர் செல்கிறோம். ஆனால், போய் சேர்ந்த பிறகு வாகனத்தை விட்டு விட்டு நல்ல ஹோட்டல் எது என தேடி களைத்துப் போகிறோம். நமது பர்சும் இளைத்துப் போகிறது. இப்படிக் களைத்துப் போன ஒரு நபர் கைதேர்ந்த இன்டிரியர் ஆர்க்கிடெக்டாக இருந்தால் என்ன செய்திருப்பார்?

ஹாலந்தைச் சார்ந்த ஒரு இன்டிரியர் ஆர்க்கிடெக்ட் ஜோசப் பெனஸ்கி என்பவர் தனது காரை ஒரு நடமாடும் மினி வீடாக மெனக்கெட்டு மாற்றியிருக்கிறார். அடிக்கடி டூர் செல்லும் அவருக்கு தங்குமிடம் என்பது மிகவும் கடினமாக இருக்கவே மாற்று வழி தேடி ஆராய்ந்ததின் பலன்தான் அவரது வீல் ஹவுஸ்.

  அதிகபட்சம் 15 நிமிடங்களில் இந்தக் கார் வீடாகிறது. மறுபடியும் 15 நிமிடங்களில் வீடு காராகி பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் கதவுகள் மேற்புற திறப்பு வகையைச் சார்ந்தது என்பதால் காரை நிறுத்தி விட்டு கதவை மேல்நோக்கித் திறந்து வைத்தால் மிகப் பெரிதான இடம் காரைச் சுற்றியும் கிடைக்கிறது. இந்தக் காரின் இருக்கைகளை மாற்றி  அமைத்தால் படுக்கையறை கிடைத்துவிடும். மேலும், இதில் கிச்சன், ரெஃப்ரிஜரேட்டர், பாத்ரூம் போன்றவையும் உண்டு.

மினி வீடாகவும், மினி ஹோட்டலாகவும் தனது காரை மாற்றிக் கொள்வதால் தனக்கு துவக்கத்தில் செலவிருந்தாலும், இப்போதெல்லாம் தங்கும் இடத்திற்கென தனியே செலவு செய்ய வேண்டியதில்லை என்கிறார் பெனஸ்கி. இவரது ஹாலிடே காரைப் பார்த்த நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் தங்களுக்கும் இதே போன்ற காரை செய்து தரச் சொல்லி ஆர்டர் செய்திருக்கிறார்களாம். பெனஸ்கி தற்போது இம்பாலா கார்களை மினி வீடாக மாற்றி அமைக்கும் முயற்சியில் படு பிஸியாக இருக்கிறார்.
வெள்ளைக்காரர் ஒருவர் இம்பாலா காரில் கைவண்ணத்தைக் காட்டும் போது நமது டூர் பிரியர்கள் இன்னோவா கார்களை டூ இன் ஒன்னாக மாற்றி அமைத்தால் ஹோட்டல்களைத் தவிர்க்கலாமே!

கரியமில வாயு இல்லாத கட்டுமானப்பொருள் !


இங்கிலாந்தில் உள்ள இலண்டனைச் சேர்ந்தது லிக்னாசைட் நிறுவனம். 
இவர்கள் உருவாக்கி இருக்கும் உலகின் முதல் கரி எதிர் கட்டுமானப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கட்டிக்குக் கார்பன் பஸ்டர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.கார்பன் பஸ்டரில் சுமார்பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

பழைய குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் துணைத் தயாரிப்புப் பொருளாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கார்பன் பஸ்டரைத் தயாரிக்கலாம். கார்பன் பஸ்டரின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா?

இது கணிசமானஅளவுக்குக் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. ஒரு பொருளை உருவாக்கும்போது எந்த அளவுக்குக் கரியமிலவாயு உற்பத்தி ஆகிறதோ அதைவிட அதிகஅளவு கரியமிலவாயுவை அது உறிஞ்சிக் கொள்ளுமானால் அது சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்வதாக அமையும். கார்பன் பஸ்டர் அப்படித்தான் செயல்படுகிறது.
ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர் சுமார் 14 கிலோ அளவிலான கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. கிரீன்விச் பல்கலைக் கழகத்தில் கார்பன்பஸ்டரை முற்றிலுமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைத் தண்ணீருடன் கலந்து, கரியமில வாயுவை உள்ளிழுக்கும் புது வகைக் கட்டுமானப் பொருளைத் தயாரிக்கலாம்.

இயற்கையில் கிடைக்கும் ஜல்லிகளுக்குச் சரியான மாற்றாகக் கார்பன்பஸ்டரைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் கொண்ட கலவையைக் கொண்டும் கார்பன் பஸ்டரை உருவாக்க முடியும். இத்தகைய கட்டுமானப் பொருளை உருவாக்கும் போது கரியமில வாயு குறைந்த அளவுக்கே உற்பத்தியாகிறது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஏற்றது. உலகிலேயே உற்பத்தியின் போது குறைந்த அளவு கரியமிலவாயுவை வெளியிட்டு, தயாரிக்கப்படும் அதிநவீன கட்டுமானப் பொருள் கார்பன் பஸ்டர்தான் என்று இதன் தயாரிப்பாளர்கள் பெருமை பொங்கக் கூறுகிறார்கள்.
இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டிற்கெல்லாம் அனைத்து வீடுகளும் கரியமிலவாயுவை வெளியிடாத கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்திருக்கிறார்களாம்.

மெட்டல்கிராஃப்ட்டின் உலோகப் படைப்புகள் !


உங்கள் கட்டிடம் கட்டுமானப் பணியுடன் நிறைவு பெற்றுவிடாது. கட்டிடத்திற்கு ஏற்ற காம்பவுண்டுகள், கேட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், பலவித கிரில் வேலைப்பாடுகள், பால்கனிகள், படிக்கட்டுகள் என பலவித உலோக படைப்புகள் உள்ளே வந்தால்தான் உங்கள் வீடு முழுமை பெறுகிறது.

சென்னையைச் சேர்ந்த மெட்டல்கிராஃப்ட் நிறுவனம் ஒரு கட்டிடத்திற்குத் தேவையான அனைத்துவிதமான உலோக தடுப்புகள், ஜன்னல்கள் எனத் தொடங்கி, காம்பவுண்டு சுவர்கள், கேட்டுகள் என நமது தேவைகளின் பெரும் பகுதியை நிறைவேற்றி  விடுகிறது. இதன் உலோக சுழற்படிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை. அவை நிறுவுவதற்கு மிகவும் எளிதானவை. மேலும், வழக்கமான கார்டன் ஃபர்னிச்சர்களுக்கு மாறான சூப்பர் லுக்கினைத் தரும் மெட்டல் ஃபர்னிச்சர்களை இது தயாரித்து அளிக்கிறது.

பல் வகையான உலோக படைப்புகளை மெட்டல்கிராஃப்ட் தயாரித்து அளித்தாலும், இதன் காம்பவுண்டு கேட்டுகள் மிகவும் பிரசித்தமானவை. வழக்கமான கதவுகள், மரக் கதவுகள், ஸ்லைடிங் கேட்டுகள், யூரோ மாடல் கேட்டுகள், ஆட்டோமேடிக் கேட்டுகள், தொழிற்சாலை மற்றும் கிடங்குகளுக்கான கேட்டுகள், ரோலர் கேட்டுகள் போன்ற பலவகை கேட்டுகளையும் தயாரிக்கும் நிறுவன
மாக இது விளங்குகிறது.இவர்களிடமிருந்து தானியங்கி முறையில் திறந்து மூடும் கதவுகளை 3 முதல் 10 மீட்டர் வரையிலான அகலத்திற்கு அமைக்கலாம். அடிக்கடி திறந்து மூட வேண்டி இருக்கிறதா? போக்குவரத்து அதிகமா? மனிதர்களை
மட்டும் அனுமதிக்க வேண்டுமா? கன ரக வாகனங்களையுமா? உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற கதவுகள் கிடைக்கின்றன.பெரும்பாலும் இந்த வகைக் கதவுகளை மின் காந்த அடிப்படையில்தான் இயக்குகிறார்கள்.

இத்தகைய கதவுகளைப் பராமரிப்பது பெரிய தொல்லையாக இருக்குமோ என்றும் கவலைப்பட வேண்டியதில்லை. பராமரிப்பே தேவைப்படாத வகைகளெல்லாம் கூடக் கிடைக்கின்றன.அளவில் பெரியவையாகவும் எடையில் கனமானவையாகவும் இருக்கும்.
கதவுகளைத் திறந்து மூடும் வேலைகளைச் செய்வதற்குக் கனரக மோட்டார்களைப் பொருத்துகிறார்கள். இந்த வகைக் கதவுகளை இயக்குவதற்கு 400 வோல்ட் மின் அழுத்தம் தேவைப்படும். இது மும்முனை மின்சாரமாகவும் இருக்க வேண்டும்.கதவுகளைத் திறந்து மூடும் வேகம் வியப்படைய வைக்கிறது. விநாடிக்கு 3 மீட்டர் தொலைவு வரையிலான வேகத்தில் கதவுகள் இயக்கப்படுகின்றன.கதவுகளை இயக்குவதை எளிதாக ஆக்கும் முகப்பு, விசைகள் ஆகியவற்றையும் இவர்களே
தயாரித்துத் தருகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப் பல மாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன. நீண்ட உழைப்பு, பாதுகாப்பு போன்ற அம்சங்களையும் உறுதி செய்யலாம். தயார் நிலையில் விற்கப்படும் கேட்களை வாங்கி வந்து பொருத்திக் கொள்ளலாம். பொருத்துவதை விளையாட்டுப் போல் செய்துவிடலாம். எந்தக் கஷ்டமும் இருக்காது. இணைப்பு என்றாலே அது வெல்டிங் செய்யப்பட்டால்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? வெல்டிங்கிற்கு வேலையே இல்லாமல் இணைத்துப் பொருத்தும் உத்திகளெல்லாம் வந்துவிட்டன.

நீராற்றுவதற்கு ஒரு புதிய மாற்று வழி !



வழக்கமாகக் கான்கிரீட்டைப் பக்குவமடைய வைக்க என்ன செய்கிறோம்? பலகைகளைஅடைத்து முட்டுக்கொடுத்து அந்தப் பரப்பின் மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டுகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குப் பரப்பின் மேல் தண்ணீர் தேங்கி நிற்குமாறு செய்கிறோம். அப்புறம் முட்டுப் பலகைகளை விலக்கிக் கொள்கிறோம்.

இதுதான் காலகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் முறை. இப்படித்தான் நாம் கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துகிறோம். இது போதுமானதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கான்கிரீட் தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
சிமெண்ட், மணல், கம்பி எல்லாமே தர
மானவையாக இருந்திருக்கலாம். ஆனால் நீராற்றும் வேலையை முறையாகச் செய்தால்தான் கட்டடம் வலுவுள்ளதாக இருக்கும். இதில் குறை வைத்தோமானால் கட்டடத்தின் ஆயுள் குறையத்தான் செய்யும். கான்கிரீட்டின் உட்பகுதியில் இருக்கும் தண்ணீர் மெல்லிய துளைகள் வழியாக மேலே உயரும். இப்படி உயரும் நீரானது ஆவியாகி மறைந்து போகும். அவ்வாறு நேராமல் இருப்பதற்காகத்தான் கான்கிரீட் பரப்பின் மேல் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.தண்ணீர் தேங்கி நிற்பதால் கான்கிரீட்டின் மேல் தூசி படிவதும் தடுக்கப்படுகிறது. சுருங்குதல்  முதலிய  குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

விதவிதமான வழிமுறைகள்:

நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.கான்கிரீட் தளத்தின் மேல் பாத்தி கட்டி தண்ணீரைத் தேக்குவது, தண்ணீரைத் தெளிப்பது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது, பாலிதீன் தாள்களைப் பரப்புவது, இப்படிப் பல வழிகளில் நீராற்றல் வேலையை மேற்கொள்கிறோம். இந்த வழிமுறைகள் பொருத்தமானவைதானா? இந்த வகையில் செயல்பட அதிக நேரம் தேவைப்படும். உடல் உழைப்பும் அதிகமாக ஆகும். அதனால் கூலிச் செலவும் அதிகரிக்கும். தேவைப்படும் தண்ணீரின் அளவு கணிசமானதாக இருக்கும்.நீராற்றும் காலமும் அதிகமாக அமையும். தண்ணீர் ஆவியாக வறண்டுவிட்டால் வெடிப்புகள் தோன்றும்.

மாற்று வழி:

வழக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி  நீராற்றும் வேலையைச் செய்வதில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. கான்கிரீட் கலவை இடப்பட்ட உடனேயே அதன் மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக அக்ரிலின் எமல்ஷன் வகையிலான பூச்சுக்களைக் கான்கிரீட் பரப்பின் மேல் பூசலாம்.  இந்த வகைப் பூச்சை ஏற்படுத்துவதற்குத் தூவல் முறையைப் பின்பற்றலாம். அல்லது பெயின்ட் அடிப்பதைப் போல் பிரஷ் கொண்டும் பூசலாம்.கான்கிரீட் ஆனாலும் கலவை ஆனாலும் இவ்வாறு ஒரே ஒரு முறை செய்தால் போதும். ஆரம்ப கட்டத்தில் இறுகும் வேலை நடக்கும் போது இது சரியான அணுகுமுறையாக இருக்கும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின்மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். கான்கிரீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற வகையில்லாமல் சிறைப்படுத்தப்படும். ஆகவே, கான்கிரீட் நன்கு இறுகிக் கெட்டிப்படும். அதுதானே நமக்குத் தேவை?

பூமியை செதுக்கும் டென்மார்க் ரியல் எஸ்டேட் !



சதுர அங்குலம் 10 டாலர் என்ற கணக்கில் வீட்டை விற்கும் காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தையை உடைய இங்கிலாந்தை போன்றோ வாராவாரம் ஒரு 200 மாடி டவரை திறந்து அத்தனையுமே ஒரே மாதத்தில் விற்று தீர்க்கும் ரியல் எஸ்டேட் பரகாசூரன்  என பெயரெடுத்த துபாய் போன்றோ டென்மார்க் ரியல் எஸ்டேட்டிற்கு அத்தனை பெரிய அந்தஸ்து இல்லைதான்.

நமது தென்னிந்திய ஒட்டுமொத்த பரப்பை விட துளியூண்டு அதிகம் பெரிதான டென்மார்க், பால்பண்ணை விவசாயத்திற்குத்தான் பெயர்போனது என்று இன்னமும் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் 2000த்திற்கு பிறகு நீங்கள் டென்மார்க் செய்திகளைஅறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். களிமண் கட்டடங்களாக காட்சியளிக்கும் ஆப்கானிஸ்தானில் கூட ரியல் எஸ்டேட் விஸ்வரூபம் எடுக்க துவங்கியிருக்க (படத்தை சொல்லலைங்க) சுற்றுலா, கல்வி, விருந்தோம்பல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற சிறந்து விளங்கி வரும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அதி உயர கட்டிடங்களின் (Vertical growth) வளர்ச்சிதான் என்பதை உடைத்தெறிந்து பரப்பளவில்
(Horizontal growth)  வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கான முக்கிய உதாரணங்கள்தான் டென்மார்கில் நகரங்களை ஒட்டிய புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள். நம்மூரில் போன்று அல்லாமல் இங்கு ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருவது சாட்சாத் அரசாங்கமே.

   இதற்காக பயன்படுத்தப்படாத நிலங்களை சீர் செய்வது, சமன் செய்வது, வீடுகள் கட்டுவதற்கான சுற்றுப்புற சூழ்நிலைகளை ஏற்படுத்துவது கண்கள் கவரத்தக்க வடிவங்களில் லே அவுட் அமைப்பது போன்ற வேலைகளை, ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது டென்மார்க் அரசு. இவர்களது கை வண்ணத்தில் உருவாகும் லே அவுட்டுகளை பார்த்தவுடனேயே வாங்குவதற்கு ஆவலாக பறக்கிறார்கள் டென்மார்க் மக்கள்.

     அதிலும், ஒஷாகா என்கின்ற பகுதியில் அமைந்திருக்கும் வட்ட வடிவமான சர்க்கிள் லேண்டில் இடம் பிடிக்க அத்தனை போட்டி. 400 அடி குறுக்களவு உடைய மிகப்பெரிய வட்ட நிலத்தில் சுமார் 24 தனி வீடுகளுக்கான லே அவுட்டை இந்நிறுவனம் அரசுக்காக வடிவமைத்து  தந்திருக்கிறது. ஒரு வட்டத்தின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 1,25,600 சதுர அடி. இது போன்று 40 வட்ட லே அவுட்டுக்கள் உருவாக்கப்பட்டு அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. ‘வட்ட வடிவமாக லே அவுட் போடப்பட்டால் ஒரு நிலத்தோடு இன்னொரு நிலம் ஒட்டாமல் ஏராளமான இடைவெளி பரப்புடன்   தனி வீடுகளை அமைக்கலாம்’ என்கிறார்கள் இந்த நிலத்தை செதுக்கும் ஆர்க்கிடெக்டுகள். இதுமட்டுமன்றி  புதுப்புது வடிவத்தில் காண்பதற்கு அழகான ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள் முழு வீச்சில் டென்மார்க் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.

வழக்கமான வடிவத்தில் அல்லாது உருவான லே அவுட்டுகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டதைக் கண்டு மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்திலும் பூமியை செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் உள்ள ஸ்டார் வடிவ லே அவுட் அதற்கு ஒரு உதாரணம்.

ஏன் கூரை ? ஏன் செலவு ?




ஒருவீட்டின் மொத்த கட்டுமானச் செலவில் கபளீகரம் செய்வது கூரைகளும், சுவர்களும்தான். அதற்காக அவற்றை தவிர்த்துவிட முடியுமா என்ன? எத்தனை செலவு ஆனாலும் அதை அமைத்துத்தானே ஆக வேண்டும் என நீங்கள் சளைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கூரைகளையும், சுவர்களையும் வைத்துத்தான் நிறைய இன்டிரியர் பணிகள் நடக்கின்றன. அவற்றை அழகாக்குவதற்காகத்தான் நாம் நிறைய மெனக்கெடுகிறோம். ஆனால் இதெல்லாம் நம்முடைய பார்வைதான். நாம் இதற்காக வகுத்து வைத்திருக்கும் வீடு குறித்த இலக்கணங்கள் இதுகாறும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன.

ஆனால், இலக்கணங்களை மீறுவதும் கூட ஒரு அழகு. அப்படித்தான் ஒரு ஆர்கிடெக்ட் வீட்டின்
அடிப்படை இலக்கணங்களை மீறி  ஒரு புதிய இலக்கணத்தை தோற்றுவித்திருக்கிறார். எல்லோராலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளபட முடியாத அளவிற்கு இவரது படைப்பு இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் முக்கிய நாடுகள் இவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.
ஃபெர்னான்டா மேத்யூஸ் என்னும் பெயருடைய பிரேசிலைச் சார்ந்த ஒரு பெண் ஆர்கிடெக்ட் அடிப்படையில் வித்தியாசமாகவே சிந்திக்கக் கூடியவர். சுவர்களும் தரைகளும் இருந்தால்தான் வீடா? மழைக்காலத்திலும், கடுமையான வெயில் காலத்திலும் மட்டும்தான் கூரைகளின் தேவை நமக்கு தேவைப்படுகிறது.

மழையும் அல்லாத வெயிலும் அல்லாத மிதமான வானிலை காலங்களில், கூரையை எதற்காக அமைக்க வேண்டும்? தேவையில்லாத பளுவினை வீட்டிற்கு ஏன் தரவேண்டும்? என சிந்தித்து தான் கட்டிய வீட்டிற்கு கூரையையே தூக்கி விட்டார். அதுமட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாகிவிட்டது. முழுவதுமே நம்முடைய வீடு என்கிற போது லுக்கும், படுக்கையறைக்கும், சமையலைறைக்கும் இடையே எதற்கு சுவர்கள். கழிவறைக்கும், குளியலறைக்கும் கூட சிறு
மறைப்பு இருந்தால் போதாதா? என்றெல்லாம் யோசித்து தனக்கு பிடித்த கனவு வீட்டை அதிக செலவில்லாமல் அதேசமயம் ஆடம்பரமாக வடிவமைத்திருக்கிறார் ஃபெர்னான்டா மேத்யூஸ்.

இவர் கட்டியிருக்கும் வீடு பிரேசிலில் சாவ் பாலோ என்கிற பகுதியில் அமைந்திருப்பதால். இவரது நோக்கம் முழுவதும்
வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் சாவ் பாலோவில் மழை வாய்ப்பு என்பது 1.8 சதவிகிதம் தான். அதற்காக வளைகுடா நாடுகளை போல வெயிலும் வெளுத்து வாங்காது. மிக முக்கியமான விஷயம் கூரை மேல் ஏறி  வீட்டுக்குள் குதித்து
திருடும் திருட்டு படவாக்கள்  இங்கு கிடையாது.

சுமார் 2700 சதுரடியில் (250 சதுர மீட்டர்) அமைந்திருக்கும் இந்த வீட்டில் எந்த பகுதியிலும் கூரையே கிடையாது. சுவர்கள் கூட வீட்டைச் சுற்றி  அமைந்திருக்கும் சுற்றுச்  சுவர்களே. (தாய்ச் சுவர்) அன்றி  பார்டிஷன் சுவர்கள் என்பதே கிடையாது. வெகு சில இடங்களில் ஸ்டீல் கண்ணாடி மற்றும் மரப்பலகைகள் கொண்டு சிறு தடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அவையும் கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

“வீட்டிற்கும், வெளியேவும் நாம் காண்கிற ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. சுவர்களுக்கும் கூரைகளுக்கும் உள்ளே அடைப்பட்டுக் கொள்கிற சாதாரண மக்களுக்கு அந்த வித்தியாசம் புரியாது. எனது வீட்டின் அமைப்பும் அவர்களுக்கு பிடிக்காது” என்கிறார் ஃபெர்னான்டா.
உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?

கிரியேட்டிவ் சைக்கிள் ஸ்டாண்ட் !



என்னதான் நம் ஊரில் சைக்கிள்களை சுற்றுப்புறச்சூழலின் நண்பன், உடற்பயிற்சிக்கு உற்ற துணைவன் என வாயார புகழ்ந்தாலும், நகரத்துத் தெருக்களில் நம்மால் சைக்கிள்களை பார்க்கவே முடியாது. ஏனெனில், அதை இன்னமும் நாம் ஏழ்மையின் சின்னம் என்ற அளவிலேயே பார்க்கிறோம். மேல் நாடுகளில் அப்படி இல்லை. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் சைக்கிள்கள் இருக்கும். அதனாலேயே அந்த நாட்டு அரசுகள் சைக்கிள்களில் செல்வதற்குத் தனி பாதைகளும், வழிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

அரசு சைக்கிள்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மேல் நாட்டு கட்டுநர்களும், ஆர்க்கிடெக்டுகளும் தாங்கள் உருவாக்கும் கட்டிடங்களுக்கு சைக்கிள் பார்க்கிங் என தனி இடங்களை தவறாமல் வடிவமைக்கிறார்கள். அங்கு குடியிருப்புக் கட்டிடம், வணிக வளாக கட்டிடம் மற்றும் அரசு கட்டிடம் என அனைத்து வகைக் கட்டிடங்களிலும் தவறாமல் சைக்கிள் பார்க்கிங் என பிரதான இடத்தை ஒதுக்கி விடுகிறார்கள். (சென்னை ஷாப்பிங் மால்களில் சைக்கிள்களில் வருபவர்களைக் கண்டால்
வெளியே துரத்தி விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

மேல் நாடுகளில் சைக்கிள்களுக்கென இடம் விடுகிறார்கள். இதுதானா விஷயம்? என சொல்லி நகர்ந்து விடாதீர்கள். அவர்கள் இடம் விடுவதோடு, சைக்கிள் ஸ்டாண்டுகளை அட்டகாசமாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு கான்செப்ட் என பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்த சைக்கிள் ஸ்டாண்ட் என்பது நீளமான பைப்புகளை குறுக்கே நிறுத்தி அதில் ஒரு சங்கிலியை இணைத்து சைக்கிள்களை நிறுத்துவோம். அவ்வளவுதானே. ஆனால், இவர்கள் அத்தனை எளிதாக சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை விட்டுவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதனை வடிவமைப்பதற்கென்றே தனி ஆர்க்கிடெக்டுகள் உள்ளனர் என்பது நம் புருவத்தை உயர்த்தும் விஷயம்.விலங்குகள், பூக்கள், சீப்புகள், இராட்டினங்கள் போன்ற பல கான்செப்டுகளில் இதுபோன்ற வியத்தகு கை வண்ணங்களைக் காட்டுகிறார்கள் சைக்கிள் ஸ்டாண்டு ஆர்க்கிடெக்டுகள்.

மேலும், தங்கள் இணைய தளங்களில் இது போன்ற பல்வேறு வகையான உருவாக்கங்களை வெளியிட்டு, இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறார்கள். (அதை அவர்களாகவே வந்து வடிவமைத்து நிறுவினால்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது). அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் டிசைன்தான் என்ல்லாமல், நாம் வடிவமைக்கும் டிசைன்களிலும் சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை வடிவமைக்கவும் அவர்கள் தயார்.நம் நாட்டிலும் குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்களை உருவாக்கும் கட்டுநர்கள் இதுபோன்று புதிய முயற்சியில் ஈடுபட்டால் நன்றாகத்தானே இருக்கும் .

ஜீரோ எனர்ஜி வீடு!


அதென்ன ஜீரோ எனர்ஜி வீடு? இயந்திர, மின்சார, வெப்ப ஆற்றல் எதுவுமே தேவைப்படாத வீடுதான் ஜீரோ எனர்ஜி வீடு (ஜீரோ எனர்ஜி சிஸ்டம்) என்பார்கள்.இது எப்படி இயலும் என்று எண்ணத் தோன்றும்.  மிகமிகக் குறைந்த அளவிலேயே இவற்றைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளைச் செய்து முடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கான் கிரீட்டைப் பக்குவப்பட வைக்கும் வேலைகளை எடுத்துக் கொள்வோம். இதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. மின்சாரம் தேவைப்படக் கூடாது. செலவு ஆகும். வெப்பம் அல்லது குளிர்ச்சியைச் செயற்கையாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது. இப்படி எல்லா வகையிலும் முடிந்த வரை செலவுகளைக் குறைந்த பட்ச அளவில் வைத்துக் கொள்ள முடியுமா?

என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

சிமென்ட்டானது தண்ணீருடன் சேர்க்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது. கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும்போது இதுதானே நிகழ்கிறது. அதாவது, வெப்ப ஆற்றல் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த வெப்பத்தையே கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இது ஒரு உத்தி.ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கிறது. அது நேரம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு குறையவிடாமல் பாதுகாத்து நிலை நிறுத்துவது இன்னொரு உத்தி. வெப்பத்தைக் கடத்தாத கோணிகள், பாய்களைக் கொண்டு மூடி வைத்துப் பாதுகாப்பதை எளிதில் செய்ய முடியும் இல்லையா?
இதுமாதிரியான பல வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பது குறைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம். அதன் மூலம் செலவுகளைத் தன்னால் கீழே கொண்டு வந்துவிடலாம். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்பது என்ன? எதற்காக?

முடிந்தவரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரத்தை எதிர்பார்த்து நிற்பதைத்  தவிர்க்க வேண்டும். வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்.ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்ற வழிமுறை இதற்கெல்லாம் தீர்வை அளிக்கிறது. இது இத்தாலி நாட்டில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதை அவர்கள் எப்படிச் சாதித்தார்கள்?

கான்கிரீட் பக்குவடையும் நிலையில் அதனுடன் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் சேர்மானங்களை விதவிதமாக உருவாக்கினார்கள். இந்த விதத்தில் பல கடினமான வேலைகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கான்கிரீட்டைப் பக்குவப்படுத்தும் தேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாயிற்று. கட்டுமானத்தின் தரம் உயர்ந்தது. பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு வழி பிறந்தது.  வழக்கமான கட்டுமான உத்திகளைக் காட்டிலும் இது பல வழிகளிலும் மேம்பட்டதாக இருப்பது உணரப்பட்டது.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

கான்கிரீட் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் தேவை, பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் குறைந்தபட்ச இயந்திர இயக்கம். மிகக் குறைந்த மின்சாரத் தேவை. மிக மிகக் குறைந்த வெப்பத் தேவை. இவைதான் ஜீரோ எனர்ஜி சிஸ்டத்தின் முக்கிய நோக்கங்கள்.மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பத்தையோ குளிர்ச்சியையோ செயற்கையாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கான மின்செலவை மிச்சப்படுத்த முடிந்தாலே அது கட்டுமானச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும்.மின் செலவு குறைக்கப்பட்டாலே கணிசமானசிக்கனம் ஏற்படும். இயந்திரங்களுக்கான தேவைகளைக் குறைத்தால் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் ஆட்களின் கூலி வகையிலான செலவுகளும் குறையவே செய்யும்.

     ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமுறையைப் பின்பற்றுவதால் கான்கிரீட்டின் தரமும் ஆயுளும் கூடக் கூடுகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்திற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும்.
கிளீனியம் கட்டுமான வேதிப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம் பிஏஎஸ்எஃப். இவர்கள் கிளீனியம் ஏசிஈ என்ற வேதிப் பொருளை அளிக்கிறார்கள்.

இதை வாங்கிப் பயன்படுத்துவது ஜீரோ எனர்ஜி சிஸ்டத்திற்கு ஏற்ற வழியாகும்.  கான்கிரீட் ஆரம்ப நிலையிலேயே அதிக வலுக் கொண்டதாக உருவாக்குவதற்கு இது உதவுகிறது. அதனை சூப்பர் பிளாஸ்டிசைசர் என்றும் குறிப்பிடுவார்கள். அது அண்மைக்காலக் கண்டுபிடிப்பு.  பாலி கார்பாக்சிலேட் ஈதர் என்றும் அழைக்கப்படுவது உண்டு.கட்டட பாகங்களை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வழி செய்யும் பிரி காஸ்ட் தொழில்நுட்ப வேலைகளுக்கு இது பெரிதும் பயன்படும். ஆற்றல் தேவைகளைக் குறைப்பதற்கு இது உரிய வழியாகும்.சிமென்ட் பரப்பின் மீது கிளீனியம் மூலக் கூறுகள் வெகு வேகமாக ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மின்னேற்றம் பெற்ற துகள்கள் ஒன்றையொன்று விலக்கும் நிலை ஏற்படுகிறது. இது தனித் தனி சிமென்ட் துகள்களை நன்கு பரவ வைக்கிறது. இந்தப் பரவல் சீராக இருந்தால் கான்கிரீட் உறுதியடைவது விரைவடையும்.

    சிமென்ட் துகள்களைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போல் மூடிக் கொள்ளும் பிளாஸ்டிசைசர்கள் அதற்குள் இருக்கும் ஈரம் அவ்வளவு எளிதில் வெளியேறிவிடாதபடி பார்த்துக் கொள்கின்றன. நீண்ட நேரத்திற்கு ஈரம் நிலை நிறுத்தப்படுவது கான்கிரீட் இறுகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிளினீயம், அதிக அளவு சிமென்ட் பரப்பைத் தண்ணீருடன் வினைபுரிய வழி செய்கிறது. இதன் மூலம் சிமென்டும் தண்ணீரும் சேரும் போது உருவாகும் வெப்பம் விரைவில் உற்பத்தியாக நேர்கிறது. இதன் விளைவாக, கான்கிரீட் வெகு விரைவாக உறுதி அடைகிறது.மிகக் குறைந்த வெப்ப நிலைகளிலும், கடுங்குளிர் நிலவும் சூழ்நிலைகளிலும் கூட கிளீனியம் தனது செயல்பாடுகளில் குறை வைப்பதில்லை. ஆகவே இதை எங்கும் பயன்படுத்தலாம் என்றிருப்பதால் கட்டுமானத் தொழிலில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

ஜீன்ஸ் அணிந்த கட்டிடங்கள் !



மனிதர்களுக்கு ஜீன்ஸ் எப்படி நவநாகரீக உடையோ அதேபோன்று கட்டிடங்களுக்கு க்ளேசிங் படலம் ஜீன்ஸாக காட்சி அளிக்கிறது. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த க்ளேசிங் கண்ணாடி கட்டிடங்கள், அனைத்து ஐடி பார்க்குகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள்,திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் அனைத்திலும் கிளேசிங் வடிவமைப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளின் கட்டிடங்களில் கிளேசிங் செய்யாத கட்டிடங்கள் காண்பதற்கு அரிது (சமீபத்தில் கட்டப்பட்ட அண்ணா நூலக கட்டிடத்தின் ஒரு பகுதி கூட கிளேசிங் செய்யப்பட்டிருக்கிறது).
மெல்ல மெல்ல குடியிருப்பு கட்டிடங்களுக்கும் கிளேசிங் ஜீன்சை மாட்ட துவங்கியிருக்கிறார்கள் கட்டுநர்கள்.

எதற்காக கிளேசிங் செய்வது?

முதல் தேவை என்று பார்த்தால் மின் செலவைக் குறைப்பது. கிளேசிங் செய்வதற்கும் மின் செலவைக் குறைப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைப்பீர்கள். இருக்கிறது.கிளேசிங் செய்யப்பட்ட கட்டடத்தில் உறுதியான சுவர் பாதுகாப்பாக நிற்கும். என்றாலும் அதன் வழியாக நல்ல சூரிய வெளிச்சம் கட்டடத்திற்குள் நுழையும்.இப்படி இயற்கையாகவே வெளிச்சம் உள்ளே வர வழி செய்து விடுவதால் செயற்கையாக மின் விளக்குகளை எரிய விட வேண்டிய தேவை குறையும். ஆகவே மின் கட்டணமும் இறங்கும். சிக்கனம்.
கட்டடச் சுவர்களை கிளேஸ் செய்தால் வெளிச்சத்திற்கு வெளிச்சமும் கிடைக்கும். தொல்லைகளும் குறையும். மின் சாதனங்களை இயக்க வேண்டிய தேவையும் குறையும்.

கிளேசிங்கின் வகைகள்:

கிளேசிங் வேலைகளை நான்கு விதமாக வகைப்படுத்தலாம். அவை
சிங்கிள் கிளியர் கிளேசிங்,டபுள் கிளியர் கிளேசிங்,லோ ஈ சிங்கிள் கிளேசிங்,லோ ஈ டபுள் கிளேசிங்

சிங்கிள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கைக் கொண்ட கிளேசிங். ஒரே கண்ணாடித் தகட்டைக் கொண்டு கிளேஸ் செய்வது.  இதில் வெளிச்சம் முழு அளவுக்கு அனுமதிக்கப்படும். அதே மாதிரித்தான் வெப்பமும்.வெளி வெப்பம் உள்ளே வரும். உட்புறக் குளிர்ச்சி வெளியேறும். அறைக்குள் கதகதப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் இந்த முறை ஏற்றதாக இருக்கும். வெளிச்சமும் தங்கு தடையில்லாமல் உட்புக இது பொருத்தமானது.

டபுள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கு கிளேசிங்கை விடச் சற்று மேலானது. வெப்பத் தடுப்புத் தன்மையை உள்ளடக்கியது. இதற்குரிய விளக்கமும் பெயரில் இருந்தே பெறத் தக்கது. இரண்டு அடுக்குகளாகக் கண்ணாடிப் படலங்களை அமைக்கும் முறை இது.இவ்வாறு அமைக்கப்படும் இரண்டு கண்ணாடி அடுக்குகளுக்கு இடையில் காற்று இடம் பெற்றிருக்கும். கண்ணாடி, காற்று, கண்ணாடி என்று வரிசையில் வெப்பம் கடந்து வர, போக வேண்டிய பாதை அமையும். ஆகவே அறைக்குள் வெப்பம் வருவதாக இருந்தாலும் குளிர்ச்சி வெளியேற நினைத்தாலும் இந்தப் பாதை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

கண்ணாடிப் பரப்புகளுக்கு இடையில் இருக்கும் காற்று இந்தப் போக்கை மட்டுப்படுத்தும். கட்டுப்படுத்தும். வெப்ப இழப்பு தடுக்கப்படும். ஒற்றை கிளேசிங்கில் இந்தப் பயன் கிடைக்காது.இரட்டை அடுக்கு கிளேசிங் இருக்குமானால் கண்களுக்கு எளிதாகப் புலப்படும் ஒளி அலைகளை உட்புக அனுமதிப்பது இயல்பாக நடக்கும். இதனால் அறைகளுக்குள் நல்ல பார்வைத் தெளிவு உண்டாகும். குளிர்ப் பகுதிகளில் அறைகளுக்குள் இயற்கையாகவே கதகதப்பை ஏற்படுத்த இது ஏற்ற வழியாக இருக்கும்.

லோ ஈ சிங்கிள் கிளேசிங்

உட்புகுந்த சூரியக் கதிர்கள் மீண்டும் வெளியேறுவதைத் தடுக்க இந்த முறை பயன்படும். ஒற்றை, இரட்டை கிளேசிங் முறைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். நல்ல வெளிச்சமும் வெப்பப் பண்புகளும் கிடைக்கும். தேவைப்படாத ஒளி அலைகளைத் தடுக்கவும் முடியும்.அகச்சிவப்புக் கதிர் வீச்சினால் ஏற்படும் அபாயங்களையும் தடுக்கலாம். வீட்டுக்குள் வெயில் விழுந்தாலும்அதனால் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

லோ ஈ டபுள் கிளேசிங்

கண்ணாடித் தகடுகளின் மேல் தனிப் பூச்சுக்களை ஏற்படுத்துவார்கள். கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் கிரிப்டான் அல்லது ஆர்கன் முதலிய வாயுக்களை நிரப்புவார்கள். இதுதான் இந்த வகை கிளேசிங்கின் தனித்துவம். இது குளிர்காலத்தில் குளிர் இழப்பையும் வெயில் காலத்தில் வெப்ப அதிகரிப்பையும் தடுக்கும்.
என்றாலும், கிளேசிங் முறை பறவைகளுக்கு எதிரானது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆம், கண்ணா டியில் பிரதிபலிக்கும் வானத்தின் பிம்பத்தைப் பார்த்து நேரே வந்து முட்டிக்கொள்கின்றனவாம் பறவைகள். இதற்கு ஏதேனும் ரிஃப்ளெக்டர் களை வைத்தால் நல்லது.