சுமாரான பட்ஜெட்டில் சூப்பரான இன்டீரியர்! மே-2013


வீடு கட்டும்போதே அதற்குரிய இன்டீரியர் பற்றியும் திட்டமிடும் காலமிது.என்றாலும், பலரும் பெரும் பணத்தை செலவழித்தும் தங்களுக்குப் பிடித்தாற்போல் வீடு மற்றும் அலுவலகத்தின் இன்டீரியர் அமையவில்லையே என குறைபட்டுக்கொள்வார்கள். ஆனால், உங்கள் வீட்டின் அறைகளின் அளவையும், பட்ஜெட்டையும் சொல்லி விட்டால், அதற்கேற்றாற்போல் கண்ணைக் கவரும் பல்வேறு வகையான மனதை மயக்கும் இன்டீரியர்களை அமைத்து தந்து விடுகிறார்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜே இன்டீரியர்ஸ் நிறுவனம். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என பல்வேறுவகையான புராஜெக்டுகளுக்கும் இன்டீரியர் பணிகளை தங்களுடைய குழுவினருக்கு பிஸியாக பிரித்துக் கொடுத்து கொண்டிருந்த ஜே இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எட்வின் கிறிஸ்டஸ் அவர்களை சந்தித்தோம் உங்கள் இன்டிரியரின் வகைகள் என்னென்ன? “”நாங்கள் ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாக அனைத்து இன்டீரியர்களையும் வடிவமைத்து தந்திருக்கிறோம். இப்போது நவீனமயமாக்கல் காரணமாக அனைவரும் புதுமையை விரும்புவதால், அலங்காரப் பொருட்கள், விளக்குகள், சுவர்களில் ஒட்டப்படும் வால் பேப்பர்கள் முதலியனவும் மற்றும் ரெசிடென்ஷியல், கமர்ஷியல், அலுவலகம் போன்ற மூன்று வகைகளில் இன்டீரியர் வடிவமைப்பை செய்து வருகிறோம். தொடக்கத்தில் திருப்பூரில் ஆரம்பித்தோம். பிறகு கோவையில் ஒரு கிளையை தொடங்கினோம். நிறுவனத்தை மேலும் பலப்படுத்த சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறோம். எங்களின் தனிச் சிறப்பு என எடுத்துக் கொண்டால், வீடுகளில் அமைக்கும் இன்டீரியர் பணிகளுக்கு கவனம் எடுத்து செய்து வருகிறோம். ஏனெனில், கமர்ஷியல், ஆபீஸ் ஆகிய இரண்டு வகை இன்டீரியர்களில் இதுவரை செய்த டிசைன்கள் அனைத்திலும் வெற்றி பெற்று விட்டோம். மேலும், இவை இரண்டும் டிசைனர்களுக்கு சுலபமானதாகும். ஆதலால் வீடுகளில் மேற்கொள்ளப்படும் டிசைன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். மேலும், வீட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் விரும்பும் வடிவத்தில் அமைக்க வேண்டும். சமையலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை என அனைத்து விக்ஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனவே, எங்கள் நோக்கம் அனைத்தும் வீடுகளே. எங்களிடம் தகுதி வாய்ந்த 35க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கணினி மூலம் உருவாக்கும் அற்புதமான டிசைன்களை வாடிக்கையாளர்களிடம் காட்டி, அதற்குப் பிறகே இன்டீரியர் பணிகளைத் துவங்குகிறோம். அறிவியல் ரீதியாக அனைத்து டிசைன்களையும் வாஸ்து முறைப்படி, வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் அமைத்து தருகிறோம். அவர்கள் திருப்தி அடையும் வகையில் டிசைன்களை அவர்களுக்கு தோதாக மாற்றித் தருகிறோம்’’. தங்களுடைய புராஜெக்டுகளின் இன்டீரியருக்காக உங்களை நாடிவரும் பில்டர்களுக்கு தாங்கள் அளிக்கும் சலுகைகள் பற்றி .. “”எங்களிடம் வரும் அனைத்து பில்டர்களுக்கும் சலுகைகள் நிச்சயம் உண்டு. அது பில்டர்களின் கட்டு மான பட்ஜெட்டைக் கொண்டு முடிவு செய்யப்படும். மேலும், எவருக்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான முறையில் வாடிக்கையாளர்கள், பில்டர்கள் திருப்தியடையும் வகையில் சலுகைகள் வழங்குகிறோம்’’. சென்னையில் உங்கள் பணிகள்.. ”சென்னையில் கம்பீரமாக நிற்கும் பல கட்டுமானங்களில் இன்டீரியர் பணிகளை செய்து வருகிறோம். கூடிய விரைவில்உஸ்மான் சாலையில் உள்ள ‘ஸ்ரீ கோல்ட் ஜுவல்லரி’ நிறுவனத்தில் இன்டீரியர் அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவிருக்கிறோம். சென்னையில் பிரபலமான VIP-களின் வீடுகளிலும் இன்டீரியர் ஒர்க்கை செய்து வருகிறோம்’’ என்றார் எட்வின் கிறிஸ்டஸ். பளபள இன்டீரியருக்கு ஆசைப்பட்டு ஆனால் விலையைக் கண்டு தயங்கும் பலரும் இனி தங்கள் பட்ஜெட்டுக்கேற்ற இன்டீரியர் பணிகளை செய்து தரும் இந்நிறுவனத்தை அணுகலாம்: J Interiors Pvt. Ltd., Old No.20, New No.37, Teachers Colony, Adyar, Chennai-20 Mobile: 9843043350, 98434 73350 E-mail: info@jinteriors.in Web: www.jinteriors.in

மாணவர்களை முதன்மை ஆக்குவதில் முதன்மையான கல்லூரி-மே-2013


சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் ஆகிய இம்மூன்று துறைகள்தான் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள முதன்மைத் துறையாகும். நாங்கள் இந்த மூன்று துறைகளிலுமே முதன்மையாக உள்ளோம்” என்கிறார் அன்னை பொறியியல் கல்லூரியின் சிவில்துறைத் தலைவர் திரு. எஸ். ராஜன்முரளி. கும்பகோணத்திலுள்ள அன்னை பொறியியல் கல்லூரி K.K.O.முஹம்மது இப்ராஹீம் கல்வி சாரிடபிள் ட்ரஸ்டால் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அண்ணா யூனிவர்சிடி ஆஃப் டெக்னாலஜி, திருச்சியுடன் இணைக்கப்பட்டதாகும். இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்வழிக் கல்வி என்பதால் அனைவரும் எளிமையாக பொறியியல் கற்றுத் தேர்ந்தவர்களாக வருகிறார்கள். மற்றத்துறை படிப்புகளை விட பொறியியல் துறை மிகக் கடினமான ஒன்று. ஆதலால் அதனை மனதில் வைத்து முழுமூச்சுடன் மாணவர்களுக்கு கல்வி தரத்தை சிறப்பாக வழங்கி வருகிறது அன்னை பொறியியல் கல்லூரி. “இங்குள்ள சிவில் மாணவர்களுக்குத் தேவையான ஒர்க்க்ஷாப், லேப் போன்றவைகள் நவீன தொழிற்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன. எங்களிடம் அனைத்து விதமான ஆய்வுக் கூடங்களும் உள்ளன. சர்வே லேப், மெட்டீரியலின் வலிமையை பரிசோதிக்கும் லேப், FM எனப்படும் (Fluid Mechanical) லேப், மென்பொருள் ஆய்வகம், ஆட்டோகேட் (Autocad)ல் சிவில்துறை மட்டுமின்றி அனைத்து துறையினருக்கும் சுலபமாக விளங்கும் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். டிரான்ஸ்போடேக்ஷன் லேப் மற்றும் என்வரமென்டல் இன்ஜினியரிங் லேப் போன்ற ஆய்வகங்களும் எங்கள் கல்லூரியில் உண்டு. பயோடெக்னாலஜி மாணவர்கள் இணைந்து வைக்கோலில் இருந்து நைட்ரஜன் வாயுவை உண்டு பண்ணும் பரிசோதனையை செய்து வருகிறார்கள். விளையும் பொருட்களையே மறுசுழற்சி முறையில் யூரியா உரமாக பயன்படுத்த சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். கான்கிரீட் தயாரிக்கும் மெட்டீரியல் சோதனையும் மாணவர்கள் செய்து வருகிறார்கள்” என்றார் திரு. எஸ். ராஜன்முரளி. முதல்வர் திரு. L. கோதண்டபாணி அவர்களை சந்தித்து பேசியபோது “இது முதலில் கலைக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. பிறகு மேலும் மாணவர்கள் பயனுற வேண்டி பொறியியல் துறையையும் துவங்கினோம். சிவில் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் முழு நேரப் பாடப்பிரிவில் 1300க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தேர்ச்சிவிகிதம் சிறப்பாக உள்ளது” தமிழ்வழியில் பயின்று பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நீங்கள் செலுத்தும் சிறப்புக் கவனம் என்ன? “தொடக்கத்திலே ஆங்கிலத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இரண்டு ஆண்டுகள் பாடத்தை எளிய நடையில் தமிழில் நடத்துவோம். டெக்னிகல் விதிகளை தமிழில் மொழிமாற்றி கூற இயலாது. ஆதலால், அதனை கட்டாயம் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தியாக வேண்டும். எனவே, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே நேரம் பாடங்களையும் சுலபமாக புரியும்படி நடத்துகிறோம். தொழிற்நுட்ப திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பெரிய நிறுவனங்களுக்கு வருடந்தோறும் சென்று அந்த நிறுவனங்களின் புராஜெக்டுகளில் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை ஆய்வு செய்யும் இன்டஸ்ட்ரியல் விசிட், இம்ப்ளான்ட் ட்ரெயினிங் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறோம். மேலும், மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சாலைகளுக்கும், பெங்களூரு, ஆந்திரா, கேரளா போன்ற நகரங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். அணைக்கட்டுகளை பார்வையிட குற்றாலம், பாபநாசம் போன்ற அணைகளுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்றார் முதல்வர் திரு.L. கோதண்டபாணி.

ஃபோம் கான்கிரீட் கற்கள்!மே-2013


செங்கற்களின் பயன்பாடு குறைந்து ஃப்ளை ஆஷ் கற்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் மற்றும் ஒரு பசுமைக் கட்டிடப் பொருளாக கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் புதிய வரவுதான் ஃபோம் கான்கிரீட் (செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) மற்றும் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகள். இதனைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான டாம் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருள்குமார் அவர்களை சந்தித்து ஃபோம் கான்கிரீட்டை பற்றி கேட்ட போது “2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் ஜெர்மன் தொழிற்நுட்பத்தை தழுவி நம் நாட்டிற்கேற்றவாறு கீழ்க்கண்டவற்றை தயாரித்து அளிக்கிறோம். ஃபோம் கான்கிரீட் சொலூக்ஷன்ஸ் 4ஃபோம் கான்கிரீட் மிக்ஸர் யூனிட். 4ஃபோம் ஜெனரேட்டர் 4ஃபோமிங் ஏஜெண்ட் 4ஃபோம் பிளாக் கட்டிங் மெஷின் 4ஸ்டீம் கியூரிங் 4சைலோ / கன்வேயர் 4ஃபோம் கான்கிரீட் பிரிக்ஸ் அதாவது, ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளைத் தயாரிக்கும் இயந்திரங்களையும், ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளையும் நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம். சிறிய அளவிலான பில்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளை மட்டும் வாங்க விரும்புவார்கள். நடுத்தர, பெரிய பில்டர்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளைக் கட்டும் மெகா பில்டர்கள் எங்களது ஃபோம் கான்கிரீட் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி அவர்களே சொந்தமாக கற்களை தயாரித்துக் கொள்வர். அத்தகையோருக்கு கற்களைத் தயாரிக்கும் செயல் முறைகளை சொல்லித் தருவதோடு, தேவையான மூலப்பொருட்களையும் தருகிறோம். சந்தையில் உள்ள பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட்டின் பல சாதகமான அனு கூலங்களால் தற்போது ஃபோம் கான்கிரீட் இயந்திரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது”. பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட் கற்களை பயன்படுத்தும்போது கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? “இத்தயாரிப்புகளை கட்டுமானத்தில் பயன்படுத்தும்போது பளு தாங்கும் திறன், வெப்பத்தைக் கடத்தா திறன் (Thermal Insulation), ஒலியைக் கடத்தா திறன், தீயைக் கடத்தா (Fire Proof),திறன் போன்ற கூடுதல் சிறப்புகளைப் பெறுகிறது. அளவில் பெரியது. எடை குறைவானது. வேஸ்டேஜும் மிகக் குறைவாகும். மேலும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து விடலாம். கட்டு மானத்தின் மொத்த செலவுகளில் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை நிச்சயம் மிச்சப்படுத்தலாம். சந்தைக்கு வந்த புதிதில் மக்களிடையே மார்க்கெடிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம். தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் நன்மைகளை அறிந்து, தாமகவே முன்வந்து பொறியாளர்கள் முதல் சிறு வாடிக்கையாளர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளிலும், ரெடிமேட் அளவுகளிலும் தயாரித்து வழங்கி வருகிறோம். கூரைகள் மீது வெப்பத்தை தாங்கும் வகையில் ‘தெர்மல் இன்சுலேக்ஷன்’ கலவையை பூசுவதால் உள்ளே வெப்பம் புகுவது தடுக்கப்படும். சாதாரண கற்களில் சிமெண்ட், மணல், குவாரி டஸ்ட் போன்ற பொருட்கள் கொண்டு கலவை இருக்கும். அதன் அடர்த்தி அதிகம் என்பதால் ஒலி மற்றும் வெப்பத்தினை கடத்தும் தன்மை பெற்றிருக்கும். ஆனால் லைட் வெயிட் கான்கிரீட்டில் அடர்த்தி குறைவு. ஃபோம் கான்கிரீட் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எரிசாம்பல் (ஃபிளை ஆஷ்), சோயாபீன்ஸ் மற்றும் தாவர எண்ணெய்களிலிருந்து பெறப்படும் ஃபோம்மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே இந்திய காலநிலைக்கு சிறந்தது. சராசரி பிரிக்ஸ்களைவிட எடை குறைவானது, வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். தனி வீடு புராஜெக்டுகளில் ரூஃப் கான்கிரீட்டாகவும் இதை பயன்படுத்தலாம். இரு பக்கங்களிலும் மோல்டுகளை வைத்துவிட்டு ஆட்டோஃபில்லிங் முறையில் கலவை ஊற்றப்படும்போது, கான்கிரீட், பீம்கள், காலம்கள் போன்ற எல்லாமே தயார். பிறகு இரண்டே நாட்களில் வீடுகள் தயார். பிரீகாஸ்ட் கட்டுமான முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இந்த வகை கற்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்து வருகிறார்கள். ஆனால், இந்திய சந்தைக்கு இந்த வகை கட்டுமானப் பொருட்கள் புதுசு.பொறியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த இயந்திரம் இயக்குவது பற்றி பயிற்சி அளிக்கிறோம்” . உங்கள் தயாரிப்புகளின் உத்திரவாதம் பற்றி ? “மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் கூடுதலான ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறோம். ஏனெனில், மற்ற வகை கற்கள் நாட்கள் செல்ல செல்ல அதன் கடினத் தன்மை குறைந்து ஆயுள் குறையும். ஆனால், ஃபோம் கான்கிரீட் தயாரிப்புகள் அதற்கு மாறாக நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதன் கடினத்தன்மை கூடும். இயற்கைக்கு கேடில்லா பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் நீண்ட ஆண்டுகள் நீடிக்கும்” என்றார் திரு.அருள்குமார்.

தானே சொல்லும் பாடம்! மே-2013


கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒரு தேர்ந்த பொறியாளர், சிறந்த ஆர்கிடெக்ட் ஆகியோரை வைத்து கட்டடம் கட்டினால் கூடுதல் செலவாகும். அது வீண் செலவு என்று நினைத்து ஒரு மேஸ்திரியிடமோ அல்லது பொறியியல் படித்திராத ஒரு சில கட்டிடங்களை மட்டுமே கட்டிய அனுபவம் உள்ள ஒருவரிடமோ பணியை ஒப்படைத்துவிட்டு கட்டிடம் நன்றாக வர வேண்டும் என்றால் எப்படி வரும்? கட்டுமான விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு கீழ்க்காணும் வழிமுறைகள் அவசியம். மண் பரிசோதனை : ஒரு கட்டிடம் கட்டப் படுவதற்கு முன் முதலில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை மண் பரிசோதனை. ஆனால், இதை ஒரு சில கட்டுநர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பொதுமக்களிடையே இதைப்பற்றிய விழிப்புணர் வும் சரியாக இல்லை. பல லட்சங்கள் முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் அந்த முதலீட்டை பன்மடங்கு லாபத்துடன் திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்துறைக்கு வருவதால். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது. முறைப்படி மண் பரிசோதனை மேற்கொண்டு அந்த மண் பரிசோதனை முடிவுகளின் படி எது போன்ற கட்டுமானங்களை அந்த இடத்தில் கட்டவேண்டும் என்று தேர்ந்த பொறியாளரின் மேற்பார்வையின் கட்டிடத்தை கட்ட வேண்டும். ஸ்ட்ரக்சுரல் டிசைன் : கட்டுமானம் நிலைபெற்ற கட்டிடங்களாக நிலைத்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்தான். கட்டிடம் கட்டுவதற்கான ஸ்ட்ரக்சுரல் டிசைனிங் பெற்ற பிறகு, அந்த டிசைனில் குறிப்பிட் டுள்ளபடி எக்ஸிக்யூட் பண்ண தெரிந்த நபரால் அந்தப் பணி செய்யப் பட வேண்டும். பணத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று நினைத்துக்கொண்டு ஸ்ட்ரக்சுரல் டிசைனில் குறிப்பிட்டுள்ளபடி 25துது ஸ்டீல் ராடுக்கு பதில் 20துது ஸ்டீல் ராடை பயன்படுத்தினால் அந்த கட்டுமானம் தரமற்றதாகிவிடுகிறது. அதேபோல் எல்லாம் இரும்பு கம்பிதானே என்று நினைத்துக்கொண்டு தரமற்ற கம்பிகளை பயன்படுத்துதல் கூடாது. கம்பிகளின் தரம் குறைந்தால் கட்டிடங்களின் ஆயுளும் குறைந்துவிடும். கான்ட்ராக்டர்கள் : குடியிருப்பு வளாகமோ அல்லது வணிக வளாகமோ கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் அதை ஒரு சிறந்த கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்தால்தான் அந்த கட்டிடம் சிறந்த கட்டிடமாக கட்டி முடித்துத் தரப்படும்.பொதுவாக நாம் செய்யும் தவறு என்னவெனில் எந்த கான்ட்ராக்டர்கள் மிக குறைந்த பட்ஜெட்டில் கட்டுமானத்தை கட்டித்தர முன் வருகிறாரோ அவரிடம்தான் ஒப்படைக்கிறோம். குறைந்த பட்ஜெட்டில் கட்டித் தர முன்வரும் கட்டுநரிடம் நாம் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும் ? கட்டுநரை தேர்ந்தெடுக்கும் முன் அவரால் கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானங்கள் எத்தனை? அவைகளின் தரம் என்ன? சிறந்த கட்டுநரா? என்று பல்வேறு விவரங்களை தெரிந்து கொண்ட பின்னரே அந்த கட்டுநரிடம் கட்டுமானப் பணியை ஒப்படைக்க வேண்டும். பட்ஜெட் என்று பார்க்காமல் சிறந்த கட்டுநருக்காக சில லட்சங்கள் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று அவரிடமே ஒப்படைத்திடல் வேண்டும். பெரிய கட்டுமானங்களை கான்ட்ராக்டரிடம் போடும்போது அந்த கான்ட்ராக்டர் நேரடியாக அந்தப் பணியை செய்வதில்லை. அந்த வேலைக்கு கான்ட்ராக்டர் ஒரு ரேட் பெற்றுக்கொண்டு அதை சப்கான்ட்ராக்டரிடம் அவர் பெற்ற தொகையை விட குறைந்த ரேட்டிற்கு ஒரு சப் கான்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைக்கிறார். இப்படி அடுத்தடுத்த சப்கான்ட்ராக்டரிடமே செல்வதால் அவர்களால் தரம் கொடுக்கமுடிவதில்லை. க்யூரிங் : நாம் செய்த முதலீட்டை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதற்காக அவசரஅவசரமாக பணியை முடித்து அந்த கட்டிடத்தை விற்பனை செய்துவிடுவதால் அந்த கட்டிடங்கள் முறையாக க்யூரிங் செய்யப்படுவதில்லை. க்யூரிங் என்பது ஒவ்வொரு ஸ்டேஜிலும் காலை,மாலை மற்றும் குஷூப்பிட்ட நாட்கள் வரை செய்யப்படுவதாகும். இதை சில கட்டுநர்கள் சரிவரச் செய்வதில்லை. ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) :தற்போதுRMC யால்தான் பெரும்பாலான கட்டிடங்களுக்கு கான்கிரீட் போடப்படுகிறது. ஆகவே, போட்டிபோட்டுக்கொண்டு நிறைய கம்பெனிகள் RMC தயாரிக்க தொடங்கிவிட்டன.RMC கான்கிரீட் போடும்போது பம்ப் செய்து மேலேற்றி சென்ற பிறகுதான் க்யூப் டெஸ்ட் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் கீழே க்யூப் டெஸ்ட்டை செய்துவிடுகிறார்கள். இந்த விவரம் அனைவருக்கும் தெரிவதில்லை. RMC-யில் தேர்ந்த தொழிலாளர்கள் அந்த பணிகளில் ஈடுபடுவதில்லை. ஒரு டிரைவர் அல்லது ஒரு தொழிலாளி இதைச் செய்யும் போது அதைப் பற்றிய ரேஷியோ அவர்களுக்குத் தெரிவதில்லை. கான்கிரீட்டை மேலேற்றும்போது தண்ணீர் அதிகம் கலந்துவிடுவதால் அது தரமற்ற கான்கிரீட் ஆகி விடுகிறது. அப்படித் தரமில்லாததால் அந்த கட்டிடத்தின் ஆயுளும் அதோகதிதான். ஆகவே, யூனிளீ என்றால் தரமான கம்பெனியை தேர்வு செய்வதன் மூலம் கட்டு மானத்தை தரமானதாக உருவாக்க முடியும். கம்பிகள் : ஸ்டீல் ஒர்க் செய்யும் போது ஒவ்வொரு காலம் லாப்பிங்கிற்கும் அதாவது 25MM ஸ்டீல் ராடுக்கு ஒரு மீட்டர் லாப்பிங் இருக்க வேண்டும். சில கான்ட்ராக்டர்கள் பணம் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கில் ஒரு கட்டிடத்திற்க 40 முதல் 50 காலம் வரை அமைக்கும்போது ஒரு பெரிய தொகை மிச்சமாகிறது. அந்த ஒரு மீட்டர் லாப்பிங்கிற்க்கு பதிலாக ஒரு அடி முதல் இரண்டு அடிக்குள் வைத்து விடுகிறார்கள். இதுபோன்று அமைக்கும்போது காலத்தில் க்ராக் ஏற்பட்டு விடும். பார்பென்டர், சூபர்வைசர் ஆகியோருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிவதில்லை. கட்டிடத்திற்குள்தானே இருக்கின்றது என்று மெத்தனமாக இருந்துவிடுகிறார்கள். அடுத்தது, கம்பிகளுக்கு இடையேயான ஸ்பேசிங் ப்ராப்பராக செய்வதில்லை.ஒவ்வொரு ஜங்க்ஷனிலும் ரிங்ஸ், லாப்பிங் மற்றும் ஸ்டீல் ராடுகளின் அளவை சரியாக பயன்படுத்த வேண்டும். கல்வி முறை குறைபாடு : கட்டிடவியல் படித்து முடித்து களப்பணியில் ஈடுபடும்போது அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ப்ளு மெட்டல் என்றால் என்னவென்று தெரியவில்லை.ஜல்லிகளின் அளவுகள் தெரிவதில்லை. செங்கற்களின் நீளம் அகலம் உயரம் தெரிவதில்லை. கம்பிகளின் அளவுகள்,எந்த கம்பியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பவை தெரிவதில்லை. கட்டிடவியல் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு களப்பணியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அப்படி பயிற்சி அளித்தால் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம். சிறந்த கட்டுமானங்களையும் உருவாக்கலாம்.

தமிழ்நாட்டுக்கும் வருமா 'தானே'வின் நிலைமை?மே-2013

தேர்வுகளின் தீவிரம் துவங்கியிருந்த ஏப்ரல் மாதம். மாலை 5.10. மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டம், மகாவே சாலையில் 5 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருபுறம் பரீட்சைக்கு எந்தக் கேள்விகளைப் படிப்பது? எந்தக் கேள்விகளை விடுவது என பதைத்துக் கொண்டிருந்த மாணவர்கள். ஒருபுறம் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பெற்றோர்கள். ஒருபுறம் உறங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த குழந்தைகள். சட் சட் சட், சடார்... அத்தனைப் பேருக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. பூகம்பமா? வெடிகுண்டா? என யோசிப்பதற்குள் புழுதிக்காடாய் சரிந்து விழுந்தது அந்த தானே குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் வசித்த 28 குடும்பங்களில் சுமார் 74 பேர் உயிர் இழக்க, 60 பேர் படுகாயம் அடைந்ததாக பிறகு வந்த தகவல்கள் பதிவு செய்தன. ஏன்? என்னவாயிற்று அந்தக் கட்டிடத்திற்கு? 2011 ல் துவங்கப்பட்ட அந்த குடியிருப்பு புராஜெக்ட் 2013 பிப்ரவரியில் முடிவுற்றது. அதற்குப் பிறகு வாக்களித்தபடி தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைத்திருக்கிறார் அதன் கட்டுநர். அதன் பிறகு தொடர்ந்து அந்த குறிப்பிட்ட கட்டுமானத்தின் மீதே 6, 7 அடுக்குமாடிகளை தொடர்ந்து கட்டியிருக்கிறார் அந்த பேராசை கொண்ட கட்டுநர்.முதலில் கட்டிய 5 அடுக்குகளுக்கும் சரி, பின்னர் கட்டிய 2 அடுக்குகளுக்கும் சரி, யாதொரு அனுமதியும் பெறவில்லை என செய்தி வெளியிட்டது தூக்கம் கலைந்து எழுந்த அந்த மாவட்ட நகராட்சி. கட்டிட விதிகளை மீறிய தவறுகளைத் தவிர, மண் பரிசோதனை, கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டது. மற்றும் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊடகங்களும், கட்டிடவியல் நிபுணர்களும் அள்ளித் தெளிக்கின்றனர். இது தவிர, மேலும் பல முறைகேடுகள் இந்த குடியிருப்பு கட்டுமானத்தில் நடந்திருக்கின்றன. 1. விதிகளின்படி ஒரு கட்டுமானம் முழுமையாக நிறைவுற்ற பிறகு பணி முடிவு சான்றிதழ் நகராட்சியால் வழங்கப்படும். அதற்குப் பின்பே, குடும்பங்கள் குடியமர்த்தப்பட வேண்டும். இந்த விக்ஷயத்தில் அது நடைபெறவில்லை. (இந்த நிலைமை சென்னையிலும் உண்டு. உரிய கால அவகாசத்தில் பணி நிறைவு சான்றிதழைத் தராமல் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்பது கட்டுநர்களின் குற்றச்சாட்டு). 2. சில கட்டுநர்கள் தங்களது கட்டுமானத்தை பகுதி பகுதியாக முடித்து விற்பனை செய்வார்கள். அதாவது 2 பேஸ் (பிளாக்குகள்) கொண்ட குடியிருப்பு எனில், ஒரு பிளாக் கட்டிடம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்களைக் குடியமர்த்தி விட்டு அருகாமையிலேயே இன்னொரு பிளாக் கட்டுமானத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், ஒலி மற்றும் சுற்றுப்புற மாசுத்தொல்லை ஏற்படும் என்பதால் இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். மேலும், கட்டுமானப் பணி நடைபெறும்போது ஒரு பக்கம், இயந்திரங்கள், வாகனங்கள் வருவதும், போவதுமாக இருக்கும். அந்த சமயத்தில் பணிகள் முடிவுற்ற கட்டுமானத்தில் வசிக்கும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆகவே, குறைந்தபட்சம் முடிவுற்ற பிளாக்குகளை தனிக் கட்டிடமாக வழி ஏற்படுத்தி, தடுப்புகளையாவது கட்டுநர் நிறுவ வேண்டும். ‘தானே’ குடியிருப்பில் இதுவும் நிறைவேற்றப்படவில்லை. 3. எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு முடிவுற்ற கட்டுமானத்தில் மனிதர்கள் வாழும்போது அதற்கு மேல் கட்டுமானங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை.(மிகச் சிறிய கட்டுமானங்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். உதாரணம், தண்ணீர் தொட்டி கட்டுதல், சிறிய ரூம் அமைத்தல்).ஆனால், அடுத்தடுத்து இரண்டு மாடிகளை மிகவும் புதிதாகக் கட்டப்பட்ட கட்டுமானத்தின் மீது யாதொரு பயமுமின்றி தொழிற்நுட்ப அறிவுமின்றி, ஒரு கட்டுநர் கட்டுகிறார் எனில் அவருக்கு எத்தனை பேராசை இருந்திருக்க வேண்டும்? 4. இது தவிர, அங்கு வசித்த குடும்பங்களைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும். ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் பணத்தைக் கொடுத்து வீட்டை வாங்கிய மக்கள் எனும்போது நிச்சயம் அவர்கள் படிக்காத கீழ்த்தட்டு மக்களாக இருந்திருக்க மாட்டார்கள். நகராட்சியால் வழங்கப்படுகிற பணிநிறைவு சான்றிதழை வாங்கி சரி பார்க்காமல், உடனேயே புது வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என பேராவல் கொண்டது, மற்றும் தாங்கள் குடியிருக்கும்போதே தங்கள் வீட்டிற்கு மேல் நடைபெறும் கட்டுமானத்தை எதிர்க்காமல் போனது ஆகியவை இரண்டுமே வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும் கூட என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் நன்கு புலனாகிறது. “ ‘தானே’ கட்டிடம் ஒரு வெளிப்பட்ட உதாரணமே தவிர, அதைப் போன்றே பெரும்பாலான கட்டிடங்கள் நாடு முழுவதிலும், ஏன்? நம் தமிழ்நாட்டிலும் உருவாகி வருகின்றன” என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் திரு. ராஜாராம்.கட்டிடவியல் நிபுணரான திரு. ராஜாராமிடமும், ‘தானே’வில் நடந்த இந்த கோர கட்டிட விபத்து தமிழ்நாட்டிலும் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டா? எனக் கேட்டபோது “இதற்கு முன்பு கோவையில் ஒரு கட்டிடம் புதைந்துபோனது உங்களுக்கு நினைவில்லையா? அதைப்பற்றி சில நாட்கள் எல்லோரும் பேசினார்கள், எழுதினார்கள். பின்பு அதைப்பற்றி மறந்தே போனார்கள். காலம் காலமாக மண்பரிசோதனை செய்யாமலும், கட்டிட வடிவமைப்புகளை ஆராயமலும் கட்டிடங்களைக் கட்டுவது என்பது தமிழ்நாட்டிலும் உண்டு. சென்னை நகருக்குள்ளாவது பரவாயில்லை. கொஞ்சம் புறநகர் வந்து பாருங்கள். எத்தனை கட்டிடங்களை விதிகள் மீறி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது தெளிவாகப் புரியும். ஊரப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் தரைதளம், மற்றும் ஓரடுக்கு கட்டுமானங்களுக்கு (ஜி+1) டி.டி.சி.பி. அப்ரூவல் தேவையில்லை என்பதால் உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி இருந்தாலே போதும் என்கிற நிலைமை உள்ளது. கட்டிடம் பற்றிய விழிப்புணர்களை ஏற்படுத்த விருப்பம் இல்லை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு கட்டிடம் சரிந்து, விபத்தினை ஏற்படுத்தி பல குடும்பங்களை பலி கொள்கிறது என்றால் அதற்கு கட்டுநர்கள் மட்டுமே காரணம் இல்லை. முதலில் அரசு, பிறகு உள்ளூர் நகராட்சி அமைப்பு, அதற்குப் பிறகு கட்டுநர், அவரிடம் பணிபுரியும் அதிகாரிகள், முறைகேடான கட்டு மானத்தில் முறையாக விசாரிக்காமல் வந்து குடியமர்ந்து மக்கள் இவர்கள் அனைவருக்குமே அந்த உயிர்ச்சேதத்தில் பங்கு இருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் ராஜா. அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள், பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? இவற்றுக்கு அனுமதி அளிக்கும் அரசு துறைகள் எப்படி கண்காணிக் கின்றன? கட்டிடத்தின்பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை மட்டுமல்லாது, நம் பாதுகாப்பையும் வீடு கட்டுபவரை நம்பிக் கொடுக்கிறோம்.ஆனால்,இந்த கட்டிடத்தை கட்டி முடித்து விற்பனை செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் கணக்கு போட்டு செயல்படும் சில கட்டுமான நிறுவனங்களால் இத்துறையில் நியாயமாக செயல்பட நினைப் பவர்கள் பெயரும் கெடுகிறது.குறைந்த காலத்தில், அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள போட்டியும், ‘தானே’ சம்பவத்துக்கு ஒரு காரணமாக உள்ளது என்பது உண்மை. கட்டுமானத் தொழிலில் விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், அவை எந்த அளவுக்கு அமலாக்கப்படுகின்றன என்பது பொறுத்துதான் தானேவின் நிலைமை தமிழ்நாட்டிலும் வெளிப்படுமா? என்கிற கேள்விக்கு பதில் இருக்கிறது.

தானமைவு கான்கிரீட்டின் வரவேற்பு! மே-2013


முதல் வாரம் ஈ அடித்த தமிழ்படம் ஒன்று அடுத்த அடுத்த வாரங்களுக்கு சூப்பர் ஹிட்டாகி கல்லா கட்டுவது போன்ற கதைதான் எஸ்.சி.சி கான்கிரீட்டிற்கும். துவக்கத்தில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படாத எஸ்.சி.சி கான்கிரீட் தற்போது கட்டுமானத் துறையின் அனைத்து பணிகளுக்கும், குஷூப்பாக தளம் அமைப்பு பணிகளுக்கு தோதான கான்கிரீட் என்ற பெயர் பெற்றுவிட்டது. எஸ்.சி.சி என்று சுருக்கமாக அழைக்கப்படுவது ஸெல்ஃப் கன்சாலி டேட்டிங் கான்கிரீட் ஆகும். இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இணையற்ற தொழிற்நுட்பம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்ட உலக வர்த்தக மையம் மீண்டும் எழுந்து நிற்பது இந்த எஸ்சிசியின் புண்ணியத்தால்தான். இந்த எஸ்சிசியின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்தான். இதில் அப்படி என்ன விசேக்ஷம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். நேர்த்தியான கலை வேலைப்பாடுகளை உலோகங்களில் எப்படி உருவாக்குகிறார்கள்? உலோகங்களைத் தண்ணீர் போல் உருக்குவார்கள்.அவற்றை அச்சுக்களில் வார்ப்பார்கள். உலோகம் அச்சுக்களுக்குள் புகுந்து ஓடி நிறைந்து இறுகிக் கெட்டியாகி வடிவம் பெறும். ஏறக்குறைய அதே போன்ற செயல்பாடுகளால் உருவாவதுதான் இந்த எஸ்.சி.சி. எப்படி வந்தது எஸ்.சி.சி? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டு ஏகப்பட்ட காலம் ஆகிறது. இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? என்கிற கதையே படு சுவாரசியமானதுதான். 1980களிலேயே இதனை ஜப்பானியர்கள் உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் மனித வளம். சரியாகச் சொன்னால் மனித வளப் பற்றாக்குறை. திறமை பெற்ற ஊழியர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாய்ப் போகவே ஜப்பானியர்கள் குறைந்த ஆட்களைக் கொண்டு மளமளவென்று வேலைகளை முடிப்பதற்காகக் கண்டுபிடித்ததுதான் இந்த ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். கான்கிரீட் இடப்படும்போது கவனித்திருப்பீர்கள். கம்பிக் கட்டு மானத்திற்கு உள்ளே கான்கிரீட் சீராகப் பரவ வேண்டும். இதற்காக ஆட்களை வைத்து நீண்ட கம்பிகளால் குத்திக் குத்திக் கான்கிரீட்டைச் செலுத்துவார்கள்.இப்படிக் கான்கிரீட்டைப் பரவச் செய்வதற்கு அதிக அளவில் ஆள்பலம் தேவைப்பட்டது. அதற்கேற்ற வகையில் ஆட்கள் கிடைக்க வில்லை. வேலைகள் தேங்கி நின்றன. கம்பியால் குத்திவிடுவதற்குத் தேவையில்லாத விதத்தில் கான்கிரீட் தானே ஓடிப் பரவி நிரம்பினால் எப்படி இருக்கும்?இப்படி ஒரு கேள்விக்கான விடைதான் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். இதில் தண்ணீர் கசிந்து வெளியேறும் பிரச்சனை இல்லை. கான்கிரீட் உதிரியாகாது. மாறாக ஒருங்கிணைந்து உறுதியாகும். வலு அதிகமாகும். வேலை விரைவில் முடியும். காற்றுக் குமிழ்கள் தங்காது. வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நிற்காது. இத்தனை நன்மைகள் இந்த ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் உண்டு. அதனால்தான் இதற்கு அப்படியொரு வரவேற்பு. ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டினால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு.கான்கிரீட்டை இடும் வேலை வெகு எளிதாக முடிந்துவிடும். குறைந்த நேரமே போதும். ஆட்களும் குறைவான எண்ணிக்கையிலேயே தேவைப்படுவார்கள். செலவுகள் குறையும். ஆதாயம் அதிகரிக்கும். இவை எல்லாவற்றையும் விடக் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் விக்ஷயம் என்னவென்றால் இந்த வகைக் கான்கிரீட்டை இடுவதால் ஒலியினால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு அறவே இருக்காது. ஏன் தெரியுமா? இங்கு வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவது கிடையாது.வைப்ரேட்டர்களை இயக்குவதால் ஏற்படும் இரைச்சல் இருக்கவே இருக்காது. இதுவே பெரிய விஷயம் இல்லையா? எப்படிப் பாய்கிறது? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் எப்படித் தானாகவே பாத்திகளில் தண்ணீர் பாய்வது மாதிரி பாய்ந்து நிரம்புகிறது? இதற்குக் காரணம் அத்துடன் கலக்கப்படும் வேதிப்பொருட்களும் இதர சேர்மானங்களும்தான். பாலிகார்பாக்சிலேட் பாலிமர்கள் என்று அழைக்கப்படும் பன்மங்களே இந்தச் சீரான பாய்ச்சலுக்குக் காரணமாக அமைகின்றன. கலவையின் பிசுபிசுப்புத் தன்மையை விரும்பிய அளவில் நிலைநிறுத்த உதவும் வேதிப் பொருட்களும் தகுந்த அளவில் கலக்கப்படுகின்றன.மேலும், தண்ணீருக்கும் சிமெண்டுக்குமான விகிதமும் எளிதான பாய்ச்சலை உறுதி செய்கிறது. பயன்படுத்தப்படும் சல்லிகளின் அளவும் நுட்ப மானதாக அமைய வேண்டும் என்பது இன்னொரு தேவை. இவற்றிற்கெல்லாம் பண அடிப்படையில் கணக்குப் பார்த்தால் கட்டுமானச் செலவு அதிகமாகத்தான் ஆகும் என்பது உண்மை. இந்தக் காரணத்திற் காகவே எல்லா இடங்களிலும் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் பயன்படுத்தப்படுவதில்லை.பணச் செலவு அதிகமாக ஆகுமானால் அந்தத் தொழிற்நுட்பத்தால் பலன் இல்லையே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் மற்ற நன்மைகளையும் கருத்திற் கொண்டால் இந்தச் செலவு நியாயமானதே. உயரமான கட்டடங்களைக் கட்ட வேண்டுமானால் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் அதிக வலுவுடன் உருவாக்கப்பட வேண்டும். கான்கிரீட்டின் இறுக்கம் சதுரஅங்குலத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் அளவுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப் பார்கள்.உலகின் மிக உயர்ந்த கட்டடங்கள் பலவற்றை இந்த விதிக்கு உட்பட்டுத்தான் அமைப்பார்கள். இதனை மிஞ்சும் விதத்தில் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பவுண்ட் அளவிற்கு இறுக்கம் இருக்குமாறு அமைத்துத்தான் புதிய உலக வணிக வளாகத்தைக் கட்டுகிறார்கள். இது 102 மாடிகளைக் கொண்டதாக அமையும். கட்டடங்களின் உயரம் அதிகமாக ஆக இன்னொரு தொல்லையும் கூடவே வரும். அவ்வளவு உயரத்திற்குக் கான்கிரீட்டைப் பம்ப் செய்வது என்பது கடினமான காரியமாக இருக்கும். ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் அந்தத் தொல்லை இல்லை.உயரத்திற்குப் பம்ப் செய்யும் வேலையை வெகு எளிதாகச் செய்யலாம். தடங்கல் இருக்காது. ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் வரவேற்பு கட்டுமானத்துறையில் ஒரு திருப்புமுனை என்று நிச்சயமாக சொல்லலாம்.

கார்பென்டருக்கு 25 டிப்ஸ்கள்! மே-2013


இன்றைய கட்டுமானத்துறையில் எத்தனைதான் தொழிற்நுட்பம் புதிது புதிதாக வந்தாலும், மர வேலைகளுக்கு இருக்கும் மவுசு ஏறிக்கொண்டேதான் வருகிறது. கார்பென்டர்களுக்கான கணிசமான சம்பளமும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. நீங்கள் கார்பென்டராக இருந்தால் உங்களது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இதோ 25 டிப்ஸ்கள். 1. எந்த வகை மரத்தைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு நீங்கள் ஆலோசனை சொல்லலாம். குறிப்பிட்ட மரத்தைத்தான் வாங்க வேண்டும் என்று அடித்துச் சொல்ல வேண்டாம். 2. வீட்டுக்காரர்கள் விரும்புகிற இடத்தில், கடையில் மரங்களை வாங்கட்டும். நீங்கள் குறிப்பிடும் கடையில்தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. மரம், பிளாஸ்டிக், உலோகம் என எதுவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வீட்டு உரிமையாளர்கள்தான். எனவே, அவர்களது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 4. குறிப்பிட்ட பயன்பாட்டிற்குக் குறிப்பிட்ட பொருள் பொருத்தமாக இராது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டுக்காரர்களுக்கு அந்த அளவுக்குத் தெரிந்திருக்காது. என்னென்ன சங்கடங்கள் வரக்கூடும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். 5. முன்பணம் வாங்குவதில் கவனமாக இருங்கள்.உங்கள் வேலைக்கு மீறிய தொகையை முன்கூட்டியே வாங்க முற்படாதீர்கள். ஒருவேளை உங்களால் வேலையை முடிக்காமல் போனால் உங்களுக்குத்தான் அதிகச் சுமையாக அமைந்துவிடும். 6. கருவிகளைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள். தீட்டுவதற்கு நேரம் வீணாகிறதே என்று பார்க்காதீர்கள். வெட்டும் வேலையை விரைவில் முடித்துவிடலாம்.உங்கள் நண்பர்களே உங்கள் கருவிகளைக் கடன் கேட்பார்கள். அதை முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள். 7. ஒருசிறிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள்,அவற்றைத் தவிர்த்த விதம், வேலையில் நீங்களே கண்டுபிடித்த புதிய உத்தி போன்றவற்றை அதில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே அதுபெரிய உதவியாக இருக்கும். 8. தேவைப்படும் அளவு மரத்தைச் சரியாகக் கணக்குப் போட்டுவாங்கி வாருங்கள். எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 9. நீங்கள் வேலை செய்யும் இடம் வெயில்,மழைக்குப் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டம் அவசியம். வீட்டிலேயே உங்கள் பட்டறையை வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களா? பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 10. உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி, நேரக் கணக்குப்படியா? நாள் கணக்கா? அல்லது பொருள்எண்ணிக்கையைப் பொருத்ததா? என்பதைத் தெளிவாக்குங்கள் . இதை ஒரு ஒப்பந்தம் போல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் சங்கடம் வராமல் தவிர்க்கலாம். 11. உங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப வேலைகளைப் பிடியுங்கள். பேராசைப்பட்டு அதிக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லல்படாதீர்கள். 12. உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் நேரத்தை வரையறை செய்து கொள்ளுங்கள்.வேலை செய்யும்போது முகத்தில் துணி கட்டிக் கொள்வதுபோன்ற சின்னச் சின்ன விக்ஷஷயங்களில்அலட்சியம் காட்டாதீர்கள். 13.எப்பொழுதுமே புதுவித கிரியேட்டிவிட்டி படைப்புகளுக்கு மவுசு அதிகம். வழக்கமான கட்டில்கள், அலமாரிகள், ஃபர்னிச்சர்களுக்குப் பதிலாக, புது வடிவத்தில், அசத்தலான தோற்றத்தில், நிறைய மரத் தயாரிப்புக்களை உருவாக்குங்கள். இவற்றை உங்களது பட்டறையிலோ, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ காட்சிக்காக வையுங்கள். அவற்ஷூல் நிச்சயம் கவரக்கூடியத் தன்மை இருந்தால், நீங்களும் நிச்சயம் பிரபலமாவீர்கள். 14.நகரங்களில் இப்போது பெரும் பற்றாக்குறையே இடம்தான். எனவே, இடத்தைச் சேமிக்கிற எந்த விக்ஷயத்திற்கும் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் தயாரிக்கும் பொருட்களும் இடத்தைக் குறைவாகப் பயன்படுத்துகிற, ஆனால் பயன்பாடுகள் அதிகமாக இருக்கிறவையாகவே உருவாகட்டும். பிறகு பாருங்கள், உங்களது தயாரிப்புகள் சந்தையில் எப்படிப் பேசப்படுகின்றன என்பதை. 15. தற்போது மல்டி பர்போஸ் ஃபர்னிச்சர்கள்தான் பிரபலமாகி வருகின்றன. அதாவது, நீட்டினால் சோஃபா, மடக்கினால் மேஜை, மடித்தால் நாற்காலி என்பது போன்ற ஃபர்னிச்சர்களை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது? 16. நீங்கள் செய்யும் எல்லா பொருட்களையுமே பார்த்தவுடன் அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உங்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளரும் உணரும் வகையில் உருவாக்குங்கள். அதாவது, ஓரத்தில் விநாயகர், சிலுவை, லோகோ போன்றவற்றைப் பொறிப்பது. 17. நீங்கள் சொந்தமாக பட்டறை வைத்திருந்தால், அதன் ஒரு ஓரத்திலேயே சிறிய மரக்கிடங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரிதாகக் கிடைக்கிற மர வகைகளை எத்தனை காசானாலும் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதானாலும் அது நமக்கு லாபத்தைத் தரும். 18. உலகளாவிய மரங்கள் மற்றும் ஃபர்னிச்சர் சந்தையைப் பற்றி அப்டேட்டாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். 19. எந்த புதிய அறிவியல் மாற்றம் வந்தாலும், அதனுடன் உங்கள் தொழிலை எவ்வாறு இணைப்பது என்பதை யோசியுங்கள். உதாரணத்திற்கு, டெலிபோன் போய் செல்போன் வந்தது, தற்போது செல்போன் போய் ஆன்ட்ராய்டு, ஐ போன் வந்திருக்கின்றன. இவை சற்று அளவு பெரிது. இவற்றிற்கு ஏற்றாற்போல மர ஸ்டான்டுகளை, சார்ஜர் பாக்ஸ்களை நீங்கள் உருவாக்கலாம். இவை ஒரு உதாரணம்தான். இவை போன்றே, நீங்கள் பல மின்னணு சாதனங்களுடன் சுலபமாகத் தொடர்புப்படுத்தலாம். 20. குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் முகவரி, அலைபேசி விவரங்ளைப் பொஷூத்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து முடிக்கும் பொருட்களின் மேல் அவற்றை ஒட்டிக் கொடுங்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். 21. புதிதாகச் செய்வதுமட்டுமே என் வேலை என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பழையவற்றைப் பராமரிப்பதும் பழுதுபார்ப்பதும் கூட நல்ல பணிதான். அதில் உங்களுக்குப் புதிய, பயனுள்ள அனுபவங்கள் கிடைக்கும். 22. மிகவும் பழமை வாய்ந்த மரச் சாமான்கள், கட்டடப் பொருட்களைக் காண நேர்கிறதா? விற்பவர்களிடம் பேரம் பேசி வாங்குங்கள். பழம் பொருட்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது இதில் நீங்கள் கணிசமாக ஆதாயம் பார்க்கலாம். 23. சில நேரங்களில், செய்வதற்குவேலை ஒன்றும் கிடைக்காமல் போகலாம். அப்போது நீங்களே கொஞ்சம்முதலீடு செய்து சில பொருட்களைத் தயாரியுங்கள். முடிந்தபோது விற்றுக் கொள்ளலாம். 24.வெளிநாட்டுப் பத்திரிகைகள், தொழிற்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள, புத்தகங்களைப் படியுங்கள். நன்கு வேலை தெரிந்தவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பலருக்கும் கற்றுக் கொடுங்கள். இதில் தொழில் இரகசியம் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. 25. மொத்தமாக ஒரு ஆர்டர் எடுக்கும்போது கொஞ்சம் விலையைக் குறைத்து காசு வாங்குவது நமது இயல்பு. ஆனால், அதன் கூடவே இலவச இணைப்பாக ஏதேனும் ஒரு சிறிய, ஆனால் அசத்தலான கைவினைப் பொருள் ஒன்றை செய்து இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்குங்கள். அது சிலையாகவோ, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாகவோ இருக்கலாம். பெங்களூருவில் ஒரு கார்பென்டர் வாடிக்கையாளர் உருவத்தை அச்சு அசலாக மரத்தில் வடித்து, சிற்பமாகச் செய்து, பரிசாகக் கொடுத்து அசத்துகிறாராம். நீங்கள் ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்யுங்களேன்!